உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10.58 கோடி பேர் பாதிப்பு - 23,07,036 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10,58,80,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,07,036 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,70,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவிற்கு 13,856 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,58,80,222 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 7,76,49,443 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு உலகம் முழுவதும் 23,07,036 பேர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 1,17,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 2,73,97,306 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,228 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 470,361 பேராக உயர்ந்துள்ளது.

World covid 19 update: Corona affected 10.58 million people and killed 23,07,036

பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 51,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா தொற்றினால் மொத்தம் 94,49,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு ஒரே நாளில் 1,244 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 230,127 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39,34,606 பேராக உயர்ந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 16,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு 527 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 75,732 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். 3,413,495 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 445,379 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 19,114 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39,11,573 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் 1,014 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 18,62,645 பேர் குணமடைந்துள்ளனர். 19,37,664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+