உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10.93 கோடி பேர் பாதிப்பு - 8.16 கோடி பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனாவால் 10,93,80,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,16,12,035 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24,10,903 பேராக உயர்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா பரவல் உலகம் முழுவதும் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,89,244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,93,80,237 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 81,61,2,035 பேர் குணமடைந்துள்ளனர். 25,357,299 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிற்கு மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 241,0,903 பேராக உயர்ந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தற்போது 11 கோடி பேரை தொட்டுப்பார்த்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

World covid 19 update: Corona affected 10,93,80,237 people

அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 63,466 ஆக குறைந்துள்ளது. மொத்தம் 2,82,60,639 பேர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரே நாளில் 1,074 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,97,137 பேராக உயர்ந்துள்ளது

பிரேசில் நாட்டில் 23,258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா தொற்றினால் மொத்தம் 9,834,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு ஒரே நாளில் 647 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,39,294 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் 14,185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,071,883 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு 430 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 80,126 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 10,972 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,38,078ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் 258பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 117,166 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 21,60,515 பேர் குணமடைந்துள்ளனர்.

பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+