Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2026ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து 9வது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்த லிஸ்டில் இந்தியா 118வது இடத்தை பிடித்துள்ள சூழலில், இந்தியாவைக் காட்டிலும் கூடுதல் பாயிண்ட் பெற்று பாகிஸ்தான் 109வது இடத்தில் இருக்கிறது. இந்த ரேங்கிங் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

உலகெங்கும் நாடுகளில் உள்ள மக்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதை ஆய்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்படும். அதன்படி இந்தாண்டிற்கான ரிப்போர்ட் இப்போது வெளியாகியுள்ளது. பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து, 147 நாடுகளை கேலப் உலக ஆய்வு (Gallup World Poll இந்த பட்டியலை உருவாக்குகிறது.

World Happiness Report 2026 Finland Tops for the 9th Year India 118th Behind Pakistan at 109th

மகிழ்ச்சியான நாடுகள்

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆயுட்காலம், சமூக ஆதரவு, வாழ்க்கை தேர்வுகளைச் செய்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையில் இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான பட்டியலில் பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக இருக்கிறது. பின்லாந்து தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.. பின்லாந்து 7.8 மார்க் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் 7.5 மார்க் உடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த மூன்றுமே ஐரோப்பிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவைத் தாண்டி பார்த்தால், கோஸ்டாரிகா இதில் இடம்பிடித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா இந்த லிஸ்டில் 4வது இடத்தில் இருக்கிறது. இது 7.4 மார்க் பெற்றுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடு ஒன்று இந்தளவுக்கு வந்துள்ளது இதுவே முதல்முறையாகும். தொடர்ந்து சுவீடன் (7.3), நார்வே (7.2), நெதர்லாந்து (7.2), இஸ்ரேல் (7.2), லக்சம்பெர்க் (7.1), சுவிட்சர்லாந்து (7.0) ஆகிய நாடுகள் டாப் 10க்குள் வருகிறது. டாப் 10ல் 8 நாடுகளை ஐரோப்பாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா

இந்த லிஸ்ட்டில் அமெரிக்கா 23வது இடத்தில் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகவே அமெரிக்காவின் தரவரிசை தொடர்ந்து சரிந்து வருகிறது. 2011இல் 11வது இடத்தில் இருந்த அமெரிக்கா, 2024இல் 23வது இடத்திற்குச் சரிந்தது. 2024ல் 24வது இடத்திற்குப் போன அமெரிக்கா, இப்போது 23ஆவது இடத்தில் உள்ளது. இளம் அமெரிக்கர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதே இதற்குக் காரணமாகும்.

இந்தியா

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த லிஸ்ட்டில் 118வது இடத்தில் இருக்கிறது. பல்வேறு மோதல்கள், பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் கூட நம்மை விடக் கூடுதல் ரேங்க் பெற்று 109ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், இந்தியா 118வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளைப் பொறுத்தவரை, நேபாளம் 92வது இடத்தில் உள்ளது. சீனா 68வது இடத்தை பிடித்துள்ள நிலையில், மியான்மார் 126வது இடத்திலும், இலங்கை 133வது இடத்திலும் இருக்கிறது. அதேபோல வங்கதேசம் 134வது இடத்திற்கும் ஆப்கானிஸ்தான் 147வது இடத்திலும் உள்ளது.

மத்திய கிழக்கு

கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய கிழக்கில் குழப்பம் இருந்தாலும் கூட அங்குள்ள இஸ்ரேல் எட்டாவது இடத்தில் உள்ளது. மத்திய கிழக்கில் அதிகபட்ச ரேங்க் வாங்கிய நாடாக இஸ்ரேல் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அமீரகம் 21வது இடத்தை பிடித்துள்ள சூழலில், சவூதி அரேபியா 22வது இடத்தை பிடித்துள்ளது. ஆசிய நாடுகளில் தைவான் மட்டும் உலக அளவில் முதல் 30 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அது 26வது இடத்தைப் பிடித்துள்ளது.

குறைந்த மகிழ்ச்சி நாடுகள்

மிகக் குறைவான மகிழ்ச்சியைக் கொண்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. சியரா லியோன் மற்றும் மலாவி அதனைத் தொடர்ந்து உள்ளன. பல ஆண்டுகளாகவே அரசியல் ஸ்திரமின்மை, போர் மற்றும் உரிமைகள் பிரச்சனை, கட்டுப்பாடுகள் காரணமாக ஆப்கானிஸ்தானில் நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில், அதன் மகிழ்ச்சி குறியீடு 3.8ல் இருந்து 1.4ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+