உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,991- 4,901 பேர் மரணம்
டெல்லி: உலக நாடுகளில் நேற்று மட்டும் 3,22,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உலக நாடுகளில் கொரோனாவால் நேற்று 4,901 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,041 ஆக பதிவாகி உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பாதிப்பு தொடர்ந்து வருகிறது. உலக நாடுகளில் நேற்று 3,22,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் 3,36,071 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். மேலும் 4,901 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர்.

உலக நிலவரம்
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 23,25,95,152. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 20,92,18,574. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,761,798.

அமெரிக்கா, இங்கிலாந்து
அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியதாக இருந்தது. கடந்த சில நாட்களாக இது குறைந்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று 24,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 259 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். உலக அளவில் இங்கிலாந்தில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி இருக்கிறது. இங்கிலாந்தில் 32,417 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்தியாவில் பாதிப்பு
இந்தியாவில் 26,041 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 276 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதில் கேரளாவில் மட்டும் 15,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கேரளாவில் நேற்று 165 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,78,786. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,29,31,972. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,47,194 ஆக உள்ளது. நாட்டில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2,99,620 ஆகும். இந்தியாவில் இதுவரை 86,01,59,011 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 38,18,362 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ரஷ்யாவில் அதிக மரணங்கள்
ரஷ்யாவில்தான் கொரோனா மரணங்கள் மிக அதிக அளவில் பதிவாகி வருகிறது. ரஷ்யாவில் நேற்று மட்டும் 805 பேர் கொரோனாவால் மரணித்தனர். மெக்சிகோவில் 596 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகினர். ஈரானில் 288; மலேசியாவில் 278 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications