உலக அளவில் 5 கோடி பேரை தாண்டியது கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் 85 லட்சத்தை தாண்டியது
உலக அளவில் தொற்றுக்கு 50,719,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
டெல்லி: உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,719,306 ஆக உயர்ந்துள்ளது.. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,261,674 ஆகும்.
நாளுக்கு நாள் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தபடியே வருகிறது.. அதற்கேற்றார்போல் டிஸ்சார்ஜ்களும் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,719,306 ஆக உயர்ந்துள்ளது.. இதுவரை கொரோனா மரணங்கள் உலக அளவில் 1,261,674 ஆகும்.. உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,780,592 ஆக உயர்ந்துள்ள நிலையில், 13,677,040 பேர் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் இதுவரை 10,286,917 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.. ரஷ்யாவில் இதுவரை 1,774,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பிரேசிலில் ஒரேநாளில் 10,554 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளது.. இதுவரை அங்கு கொரோனா தொற்றுக்கு 5,664,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 85 லட்சத்தை தாண்டி உள்ளது.. புதிதாக 46,661 பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்து 53 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 491 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.. அதன்படி நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது.. 79 லட்சத்து 15 ஆயிரத்து 660 பேர் தொற்றில் இருந்து இதுவரையில் குணமாகி உள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications