கொரோனாவுக்கு உலக அளவில் 1,278,443 பேர் பலி.. இந்தியாவில் ஒரே நாளில் 511 பேர் தொற்றுக்கு பலி

உலக அளவில் தொற்றுக்கு 51,227,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,789,591 ஆக உயர்ந்துள்ளது.. உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவரை 1,278,443 ஆகும்.

நாளுக்கு நாள் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தபடியே வருகிறது.. அதற்கேற்றார்போல் டிஸ்சார்ஜ்களும் அதிகரித்து காணப்படுகிறது.

 World wide coronavirus global cases 51,789,591

தற்போது உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,789,591 ஆக உயர்ந்துள்ளது.. இதுவரை கொரோனா மரணங்கள் உலக அளவில் 1,278,443 ஆகும்.. உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 36,362,571 ஆக உயர்ந்துள்ள நிலையில், 14,148,577 பேர் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் இதுவரை 10,557,037 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. ரஷ்யாவில் இதுவரை 1,817,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பிரேசிலில் ஒரேநாளில் 25,517 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளது.. இதுவரை அங்கு கொரோனா தொற்றுக்கு 5,675,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 86 லட்சத்தை தாண்டி உள்ளது.. புதிதாக 44,679 பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86 லட்சத்து 35 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 511 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.. அதன்படி நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 615 ஆக அதிகரித்துள்ளது.. 80 லட்சத்து 11 ஆயிரத்து 844 பேர் தொற்றில் இருந்து இதுவரையில் குணமாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+