உலக அளவில் 5 கோடி பேரை நெருங்கும் கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு உலக அளவில் 5 கோடி பேரை நெருங்குகிறது. கொரோனாவில் இருந்து 3,52,39,758 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,96,44,543 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 3,52,39,758 பேர் குணமடைந்துள்ளனர். 1,30,66,069 கோடி பேர் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களில் 12,47,962 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக உலக மக்களை முடக்கிப்போட்டுள்ளது கொரோனா வைரஸ். உலக அளவில் கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 1,00,54,376 பேர் ஆக அதிகரிப்பு. ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,42,194 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து 63,85,648 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.84,60,773 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 78,18,434 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,25,605 பேர் இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் 56,32,505 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 1,62,035 பேர் பிரேசில் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். 50,64,344 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் உலகத்தின் பல பகுதிகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் உலக அளவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடி பேராக இருந்த நிலையில் 6 மாதத்திற்குள் பல மடங்கு உயர்ந்து 5 கோடி பேராக உயர்ந்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications