உலகின் தலைசிறந்த 50 இடங்கள்.. டைம்ஸ் இதழ் பட்டியலில் 2 இந்திய நகரங்கள்.. எவை தெரியுமா?
உலகின் தலைசிறந்த 50 இடங்களை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் 2 நகரங்களும் இடம்பிடித்துள்ளது.
டெல்லி: டைம்ஸ் நாளிதழ் அவ்வப்போது உலகின் சிறந்த தலைவர்கள், இடங்கள் உள்ளிட்ட பட்டியலை வெளியிடும். அந்த வகையில் தற்போது உலகின் தலைசிறந்த 50 இடங்களை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் 2 நகரங்களும் இடம்பிடித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டைம்ஸ் நாளிதழ் அவ்வப்போது உலகின் சிறந்த தலைவர்கள், இடங்கள் உள்ளிட்ட பட்டியலை வெளியிடும்.
டைம்ஸ் நாளிதழில் இடம் பெறும் இந்த பட்டியல் சர்வதேச அளவில் கவனம் பெறக்கூடியதாக இருக்கும். அந்த வகையில், 2023- ஆம் ஆண்டுக்கான சிறந்த இடங்களுக்கான பட்டியலை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

50 இடங்கள் கொண்ட பட்டியல்
சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலா தளங்களுக்கான மொத்தம் 50 இடங்களை கொண்ட பட்டியலை டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் இரண்டு நகரங்களும் இடம் பெற்றுள்ளன. ஒடிசாவில் உள்ள மயூர்பாஞ்ச் மற்றும் லடாக் ஆகிய இரண்டு நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. லடாக்கை பொறுத்தவரை மிக உயர்ந்த மலைப்பாங்கான இடங்கள் மற்றும் திபெத்திய புத்த கலாசரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உள்ளன.

திபெத்திய புத்த கலாசாரம்
வட இந்தியாவின் தொலை தூர பகுதியில் இருக்கும் இந்த லடாக் வியக்க வைக்கும் வகையிலான பல இடங்களை கொண்டுள்ளன. லடாக்கின் தலைநகராக லே நகரம் உள்ளது. லடாக்கிற்கு தென்கிழக்கே 168 மைல்கள் தொலைவில் ஹான்லே கிராமம் உள்ளது. இதன்படி, உயர்ந்த மலைப்பாங்கான நில அமைப்புகள், திபெத்திய புத்த கலாசாரம் உள்ளிட்ட பல விசயங்களை கொண்டு உள்ள லடாக் நகரம், வட இந்தியாவின் மிக தொலைதூர பகுதியில் அமைந்து, அடிக்கடி வந்து போக கூடிய பல ஆச்சரியம் நிறைந்த விசயங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹான்லே கிராமம்
லடாக்கின் தலைநகராக லே நகரம் உள்ளது. இதற்கு தென்கிழக்கே 168 மைல்கள் தொலைவில் ஹான்லே கிராமம் அமைந்து உள்ளது. இந்த கிராமம் செயற்கை ஒளியில் இருந்தும், அதன் மாசுபாட்டில் இருந்தும் விடுபட்ட கிராமம் என்ற பெருமையை பெற்று உள்ளது. லடாக்கில் தங்குவதற்கான சிறந்த ஓட்டல்கள் உள்ளது என்பது குறித்தும் பரிந்துரையை டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.

மயூர்பாஞ்ச் சாவ் என்ற நடன திருவிழா
அதேபோல் பட்டியலில் இடம் பிடித்த மற்றொரு நகரம் ஒடிசாவின் மயூர்பாஞ்ச் ஆகும். இந்த நகரம் பசுமையான நிலப்பரப்பு மற்றும் கலாசார வளம் நிறைந்துள்ளது. பழமையான கோவில்களை கொண்ட இந்த நகரம், பூமியில் வேறு பகுதிகளில் காண முடியாத அரிய வகை புலிகள் வாழும் ஒரே பகுதி இதுவேயாகும். புகழ் மிக்க சிமிலி பால் தேசிய பூங்கா இந்த நகரத்தில் உள்ளது. இது தவிர வரும் ஏப்ரல் மாதம் பிரசித்தி பெற்ற மயூர்பாஞ்ச் சாவ் என்ற நடன திருவிழா நடைபெற உள்ளது. யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலிலும் இந்த நன திருவிழா இடம் பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications