ஊழல் அதிகமுள்ள நாடுகளின் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்? முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?
டெல்லி: டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டு ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா பின் தங்கி இருக்கிறது. ஆசிய நாடுகளில் இந்தியாவை விடவும் சீனாவில் ஊழல் குறைவாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் எந்த நாட்டில் ஊழல் குறைவாகவும், எந்தெந்த நாடுகளில் ஊழல் அதிகமாகவும் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஊழலற்ற நிர்வாகம் என்பது தான் நாட்டின் அனைத்து கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையாக இருக்கும். இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊழல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பெர்லினைச் சேர்ந்த டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம், ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மொத்தமாக 180 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல், முறைகேடுகள், புகார்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவில் ஒவ்வொரு நாட்டிற்கு மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக மதிப்பெண் பெறும் நாடுகள் ஊழல் குறைந்த நாடுகளாகவும், குறைந்த மதிப்பெண் பெறும் நாடுகள் ஊழல் மிகுந்த நாடுகளாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி 2012ஆம் ஆண்டுக்கு பின் 32 நாடுகளில் ஊழல் குறைந்துள்ளதாகவும், 148 நாடுகளில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் வழக்கம் போல் டென்மார்க் 90 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று ஊழல் குறைந்த நாடு என்ற சாதனையை படைத்துள்ளது. இதன்பின் 88 புள்ளிகளுடன் 2வது இடத்தை ஃபின்லாந்தும், 84 புள்ளிகளுடன் சிங்கப்பூர் 3வது இடத்தையும், 83 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோல் 81 புள்ளிகளுடன் லக்ஸம்பர்க் 5வது இடத்திலும் உள்ளது.
மறுபக்கம் ஊழல் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் வெறும் 8 புள்ளிகளுடன் தெற்கு சூடான் 180வது இடத்திலும், 9 புள்ளிகளுடன் சோமாலியா 179வது இடத்திலும், 10 புள்ளுகளுடன் வெனிசுலா 178வது இடத்திலும், 12 புள்ளிகளுடன் சிரியா 177வது இடத்திலும், 13 புள்ளிகளுடன் ஏமன் 173வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தானை பொறுத்தவரை கடந்த ஆண்டை விடவும் 2 இடங்கள் பின் தங்கி 27 புள்ளிகளுடன் 135வது இடத்தை பிடித்துள்ளது.
23 புள்ளிகளுடன் வங்கதேசம் 151வது இடத்திலும், 32 புள்ளிகளுடன் இலங்கை 121வது இடத்திலும் உள்ளன. தலிபான்களின் ஆட்சி நடக்கும் ஆஃப்கானிஸ்தான் 17 புள்ளிகளுடன் 165வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த முறையை விடவும் இம்முறை 1 புள்ளியை இழந்து, 38 புள்ளிகளுடன் 96வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 93வது இடத்தில் இருந்தது. இந்தியாவை விடவும் சீனா 42 புள்ளிகளுடன் 76வது இடத்தில் உள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications