உலகம் முழுவதும் 11.57 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 9.14 கோடி பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவிற்கு 432,153 பேர் பாதிக்கபபட்டுள்ளனர். மொத்தம் 11,57,45,580 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: கொரோனா பரவல் மீண்டும் பல நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவிற்கு 432,153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,57,45,580 பேராக அதிகரித்துள்ளது. 25,70,453 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் மொத்தம் 11,57,45,580 பேரை பாதித்துள்ளது. கொரோனாவில் இருந்து 9,14,59,904 பேர் மீண்டுள்ளனர். 2,17,15,223 பேர் கொரோனாவிற்கு உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 90,047 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் கொரோனாவிற்கு 10,520 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,70,453 பேராக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 53,805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,94,54,686 கோடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2,232 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,31,534 பேராக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 74,376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,22,221 பேராக அதிகரித்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 1,840 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,59,402 பேராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவை விட பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications