மொத்தமாக முடங்கிய ‛எக்ஸ்'வலைதளம்.. ஒரே வாரத்தில் 2வது முறை.. கொதிக்கும் நெட்டிசன்கள்
டெல்லி: இந்தியா, அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் எக்ஸ் (முன்பு ட்விட்டர்)என அழைக்கப்படும் எலான் மஸ்க்கின் சமூக வலைதளம் முடங்கியது. ஒரே வாரத்தில் 2வது முறையாக இந்த வலைதளம் முடங்கி உள்ளதால் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி ‛எக்ஸ்' என்ற பெயரில் மக்களுக்கு வழங்கி உள்ளார். எக்ஸ் வலைதள பக்கத்தை உலகம் முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று திடீரென்று எக்ஸ் வலைதள பக்கம் முடங்கி உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் எக்ஸ் வலைதள பக்கம் முடங்கி உள்ளது.
எக்ஸ் வலைதள பக்கத்தை திறந்து புதிய பதிவுகளை பார்க்க Refresh செய்தால் ஏற்கனவே பதிவிட்டு நாம் பார்க்காத பதிவுகளை கொண்டு வருகிறது. புதிய பதிவுகளை காட்ட மறுக்கிறது. மேலும் பதிவுகள் செய்ய முடியாமல் உள்ளது. இன்னும் சிலருக்கு திடீரென எக்ஸ் வலைதள பக்கம் லாக்அவுட் ஆகி வெளியே வருகிறது. மீண்டும் லாக்இன் செய்ய முடியவில்லை.
இதனை Downdetector வலைதளம் உறுதி செய்துள்ளது. வலைதளங்களின் செயல்பாட்டை கண்காணித்து வரும் இந்த வலைதளத்தில் முதல் சில நிமிடங்களிலேயே 65,000க்கும் அதிகமானவர்களின் புகார்கள் பதிவாகி உள்ளது. இதில், 50% பேர் எக்ஸ் செயலியில், 39% பேர் இணையதளத்தில் புகாரளித்துள்ளனர். பல நாடுகளில் இருந்து ஒரே நேரத்தில் நெட்டிசன்கள் புகார் அளித்துள்ளனர். இதன்மூலம் எக்ஸ் வலைதள உலகம் முழுவதும் முடங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப கோளாறால் இந்த பிரச்சனை வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் எக்ஸ் வலைதளம் சார்பில் இன்னும் பிரச்சனை பற்றி விளக்கம் அளிக்கவில்லை. இதனால் திடீர் பிரச்சனையின் பின்னணி, எப்போது பிரச்சனை சரியாகும் என்பது தெரியாமல் உள்ளது.
இதனால் நெட்டிசன்கள் எலான் மஸ்க்கை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். ஏனென்றால் இந்த வாரத்தில் எக்ஸ் வலைதளம் முடங்குவது இது 2வது முறையாகும். முன்னதாக கடந்த நேற்று முன்தினம் மாலையில் எக்ஸ் வலைதள பக்கம் பிரச்சனையை சந்தித்தது. அப்போதும் வலைதள பக்கம் லோட் ஆகாமல் நின்றது. அதன்பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டது. ஆனால் நேற்று சரியாக இயங்கிய எக்ஸ் வலைதள பக்கம் இன்று மீண்டும் முடங்கி உள்ளது. இதனால் நெட்டிசன்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications