ஃபிளாஷ்பேக் 2021: துடைப்பத்தை கையில் எடுத்த பிரியங்கா.. திரும்பி பார்த்த பிரதமர் மோடியும், யோகியும்
Year Ender 2022: பிரியங்கா காந்தியின் மறக்க முடியாத 2 அரசியல் நிகழ்வுகள்
டெல்லி: வருடங்கள் உருண்டாலும் சில நிகழ்வுகள் மனதில் தங்கிவிடும்.. சில நிகழ்வுகள் மக்களை சட்டென ஈர்த்துவிடும்.. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியும் மக்களை 2 விதங்களில் ஈர்த்துள்ளார்.. இந்த வருடத்தில் மறக்க முடியாத நிகழ்வாகவும் அவை காங்கிரஸ் தொண்டர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு முதல் பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது... பரபரப்பாக நடக்க போகும் தேர்தலில் பலமுனைப் போட்டிகள் நிலவி வருகின்றன.
இவைகளில் முக்கியமாக பார்க்கப்படுவது உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல்தான்.. நம் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமாகவும், 403 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய சட்டப்பேரவையாகவும் உத்தரப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது..

அபார வெற்றி
மேலும் 403 சட்டமன்ற உறுப்பினர் இடங்கள் இங்கு இருக்கின்றன... இதில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை வென்றால் மட்டுமே அதிக மாநிலங்களவை உறுப்பினர்களை பெறமுடியும்... அதனால், இந்த மாநிலத்தில் அபார வெற்றிபெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சியமைக்கும் நிலைமை தொடர்ந்து வருகிறது.. அந்த வகையில், பாஜக - சமாஜ்வாதி கட்சி - பகுஜன் சமாஜ் என்ற 3 பெரும் கட்சிகளும் மும்முரமாக களமிறங்கியிருக்கின்றன..

தீவிர முனைப்பு
அதிலும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் தீவிர முனைப்புடன் வேலை பார்த்து வருகிறது.. இதற்காகவே பிரியங்கா காந்தி, இந்த ஒரு வருஷமாகவே உபியில் அடிக்கடி முகாமிட்டு, களப்பணியை முடுக்கிவிட்டு, கட்சியையும் பலப்படுத்தி வருகிறார். ஏனென்றால், ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இதே உபியில் இப்போது, வெறும் 5 எம்எல்ஏக்கள் மட்டும்தான் உள்ளனர்..

மாநில பொறுப்பாளர்
அதனால்தான், உபியில் காங்கிரஸை தூக்கி நிறுத்துவதற்காக, 2 வருஷத்துக்கு முன்னாடியே, பிரியங்காவை மாநில பொறுப்பாளராக கட்சி மேலிடம் நியமித்திருந்தது.. அதற்கேற்றபடி பிரியங்காவும், மக்களை சந்தித்து குறைகளை கேட்பது, யாத்திரை நடத்துவது என்ற பல அதிரடிகளை கையில் எடுத்துள்ளார்.. இந்நிலையில் 2 வியக்க வைக்கும் சம்பவங்களை பிரியங்கா இந்த வருடம் செயல்படுத்தி உள்ளார்.

பிரியங்கா காந்தி
முதலாவதாக, பிரியங்காவின் தேர்தல் அறிவிப்புகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.. பெண்களை குறி வைத்து அந்த அறிவிப்புகளை பிரியங்கா அறிவித்தும் வருகிறார். இதில், சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 400 தொகுதிகளில் 40 சதவீதத்தை பெண்கள் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது" என்று சொன்னதுதான் இதில் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது... இதுதான் பாஜகவுக்கும் அதிர்ச்சியை தந்த அறிவிப்பாக கருதப்படுகிறது.

கைது
இதற்கு அடுத்தபடியாக, லக்கிம்பூர் சம்பவத்தை மறக்க முடியாது.. லக்கிம்பூரில் நடந்த விவசாய போராட்டத்தின் போது விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அங்கு பிரியங்கா காந்தி செல்ல முயன்றார்.. அப்போது அவரை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், சிதாபூர் என்ற கிராமத்தில் விடுதி ஒன்றில் அடைத்தனர்.

துடைப்பம்
அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை சுத்தம் செய்யப்படாமல் தூசி படிந்து காணப்பட்டது.. அதனால், துடைப்பம் ஒன்றை கேட்டு பெற்று, அந்த அறையை சுத்தம் செய்ய தொடங்கினார் பிரியங்கா.. இந்த வீடியோ அப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இது தொடர்பாக விளக்கம் அளித்த பிரியங்கா காந்தி, நாம் இருக்கும் அறையை நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும். அது அரசு அறையாக இருந்தாலும் சரி. என்னுடைய அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது எனக்கு பிடிக்கும். அதனால் நான் அறையை சுத்தம் செய்தேன் என்றார்..

முதல்வர் யோகி
அதேபோல, உபியின் லக்னோவில் தலித்துகள் அதிகம் வாழும் பகுதிக்கு திடீரென சென்ற பிரியங்கா, அங்கும் துடைப்பம் எடுத்து சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார்.. இதற்கு உபி முதல்வர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி தந்தார் பிரியங்கா.. "சனிக்கிழமையன்று வால்மீகி கோயில்களில் சுத்தம் செய்யும் பணிகளை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட குழுக்கள் மேற்கொள்ளும்" என்று பதிவிட்டிருந்தார். உபியை யார் ஆள்வது என்ற போட்டி அங்கு எழுந்து வரும் நிலையில், பிரியங்காவின் ஒவ்வொரு நகர்வும் காங்கிரசுக்கு பலமாகி கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications