ஆமாம்! ஹிஜாப் சர்ச்சையால் மன அமைதி போச்சு?ஒப்புக் கொண்ட ரஹ்மான் மகள்!
டெல்லி: கடந்த காலங்களில் ஹிஜாப் பற்றிய சர்ச்சைகள் தனது மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதித்ததாக ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா தெரிவித்திருக்கிறார். அப்போது வந்த அதிகப்படியான ஆலோசனைகள் எப்படி எடுத்துக்கொள்வது என்பது புரியாமல் திக்குமுக்காடியதாகப் பேசி இருக்கிறார்.
கோலிவுட் சினிமா வட்டாரத்தில் இருக்கின்ற பெண் இயக்குநர்களில் மிகவும் வித்தியாசமானவர் ஹலிதா ஹமீம். இவர் 'பூவரசம் பீப்பீ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர். அதன் பின்னால் வெளியானது இவரது 'சில்லு கருப்பட்டி', 'ஏலே' ஆகிய படங்கள் இவரை தனித்து அடையாளம் காட்டி இருந்தனர். இவர் 'மின்மினி' என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.

இந்தப் படத்தில் இளம் வயது தோற்றத்தில் நடித்துள்ளவர்கள் கதையின் படி வளர்ந்து பெரியவர்களாகின்றன. வளர்ந்த தோற்றத்தில் வழக்கமாக வேறு நடிகர்களைப் போட்டுப் படத்தை எடுப்பதுதான் வழக்கமான தமிழ் சினிமாவின் விதி. அதை உடைக்கும் விதமாகக் குழந்தைப் பருவத்தில் நடித்த நடிகர்களையே வளர்ந்த பருவத்தில் அப்படியே காட்டுவதற்காக 7 வருடங்கள் வரை இந்தப் படத்தின் படப்பிடிப்பை அப்படியே நிறுத்தி வைத்திருந்தார்.
அதன்பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தின் மூலம் எப்படி இயக்குநர் கவனத்தை ஈர்த்தாரோ அதேபோலவே இன்னொரு கவனத்தைக் கவரும் விசயம் இதற்குள் உள்ளது. இதற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதால் கூடுதல் ஆர்வத்தை இப்படம் பெற்றுள்ளது.
இந்நிலையில் கதீஜா ரஹ்மான் 'ஐஏஎன்எஸ்' செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் படம் குறித்தும் கடந்த 2019 இல் ஹிஜாப் அணிவது தொடர்பான சர்ச்சை பற்றியும் இவர் மனம் திறந்து சில விசயங்களைப் பேசியுள்ளார். ஹிஜாப் தொடர்பான சர்ச்சை தனது மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதித்ததாகவும் அந்த நேரத்தில் பலரால் முன்வைக்கப்பட்ட அளவுக்கு அதிகமான அறிவுரைகளை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவித்ததாகவும் கூறியுள்ளார்.
"ஒவ்வொருவருக்கும் ஒரு ஆறுதல் அளிக்கும் பகுதி இருக்கிறது. மக்கள் இப்போது மிகவும் உள் சுருங்கி இருந்த நிலையிலிருந்து மாறிவருவதை நான் உணர்கிறேன்.. இந்த நேரத்தில் அந்த சர்ச்சையைப் பற்றி மீண்டும் பேசுவது சலிப்பை உண்டாக்கும் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். ஒரு தனியார் பண்பலையுடன் இணைந்து கதீஜா வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஒரு இசை நிகழ்ச்சியை வழங்கும் முயற்சியில் ஒரு அங்கமாக கதீஜா இப்போது மும்முரமாக இருக்கிறார்.
அதற்கான வேலைகளை இப்போது அவர் செய்து வருகிறார். இவருடைய இசைப் பயணம் 9 வயதில் தொடங்கியது. அவரது தந்தை ரஹ்மான் இசை மீது கொண்ட காதல் அவரை இசைத்துறைக்குள் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
"இந்த இசை நிகழ்ச்சியின் முதுகெலும்பாக நாயர் இருக்கிறார். நாங்கள் இருவரும் இதற்கான வாய்ப்பு வந்தபோது பரவசமடைந்தோம். நாட்டின் வடக்குப் பகுதியில் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதுவே ஆர்வத்திற்குக் காரணமாக உள்ளது. சொல்லப் போனால் நான் கொஞ்சம் பதற்றமாகவும் இருக்கிறேன்.ஒரு இசைக்கலைஞராக இது எனக்கு நிறைய கற்றுத் தரும்" என்கிறார் கதீஜா.
தொடர்ந்து பேசி உள்ள அவர், "நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அதனால் ஒரு பக்கம் அழுத்தமும் உள்ளது. என் அப்பா ஒரு தரத்தை நிர்ணயித்து வைத்துள்ளார். அதனால் இன்னும் அதிக பொறுப்பு ஏற்படுகிறது. இருந்தாலும் அதை நான் சகஜமாக ஏற்று என்னை நான் உத்வேகம் செய்து கொள்கிறேன். நான் நேரடியாக நிகழ்ச்சிகளைச் செய்வதன் மூலம் வளர முடியும். அது என் தொடர்புகளை அதிகப்படுத்தும். இசை ரசிகர்கள் முன்பாக கச்சேரி செய்யும் போது ஒரு எனர்ஜி கிடைக்கும். நிறைய அன்பை நேரடியாக உணர முடியும்.
'மின்மினி' படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் என் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் இது. மேலும், நான் அவருடன் இணைந்து பணியாற்றுவதை ரசித்தேன். ஆமாம், அப்பாவும் நானும் இதைப் பற்றி கொஞ்சம் விவாதித்தோம். இயக்குநர் உலக இசையை முயன்று பார்க்கும் ஆர்வத்துடன் இருந்தார்.
எந்த ட்ரெண்ட்டுக்கு உள்ளாக அவர் சிக்கிக் கொள்ளாமல், பரிசோதனை செய்ய முன்வந்தது எனக்குப் பிடித்திருந்தது"எனச் சொல்லி இருக்கும் கதீஜா இன்னொரு பக்கம் மின்மினி படத்தின் இசையமைக்கும் பணியையும் செய்து வருகிறார். ஆனால், ஒரு இசையமைப்பாளராகும் திட்டம் எல்லாம் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறார்.

"ஆல்பம் பதிவேற்றினேன். இசையமைக்கப் படமும் வந்தது. என் வாழ்க்கையில் பல புதிய விஷயங்கள் நடந்துள்ளன. முன்பு இருந்த இடத்தில் நான் இல்லை. எனக்கு அது மிகவும் முக்கியமான ஒன்று. அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனக் கூறும் கதீஜா, புகழ்பெற்ற இசைக்குழு U2 உடன் இணைந்து தனது சகோதரியுடன் இணைந்து "திருக்குறள்" என்ற ஆங்கிலப் பாடலைப் பதிவு செய்து வருகிறார். சமூகப் பிரச்சினைகளைப் பற்றி யு2 இசைக்குழுவினர் பேசுவது மிகவும் ஊக்கமளிக்கிறது. இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் பல விசயங்களை கற்றுக் கொள்ள முடியும். அதற்கு இது ஒரு சிறந்த களமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
உங்களைப் போலவே நானும் மின்மினி திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறேன்" என்கிறார். இவர் இந்தோ-யுகே தயாரிப்பில் உருவாகி வரும் சர்வதேச திரைப்படம் Lioness ஆகவும் கதீஜா காத்திருக்கிறார் என்பது கூடுதலான செய்தி.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications