இந்தியாவின் மிக சிறந்த முதல்வர் இவரா? மூட் ஆப் நேஷன் சர்வேயில் வெளியான ஷாக்கிங் முடிவு!

இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்று இந்தியா டுடே சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் சிறப்பான முதல்வர் என்று பதில் அளித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்று இந்தியா டுடே சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் சிறப்பான முதல்வர் என்று பதில் அளித்துள்ளனர்.

இந்தியாவின் அரசியல் நிலவரங்கள் குறித்தும், மத்திய பாஜக அரசின் ஆட்சி செல்வாக்கு குறித்தும் இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் நிறுவனம் இணைந்து சர்வே நடத்தி இருக்கிறது. இந்த அரசு மீது மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர், செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் நிறுவனம் இணைந்து சர்வே நடத்தி இருக்கிறது.

அதே சமயம் மாநில அரசுகள் எப்படி இருக்கிறது. மாநிலங்களில் முதல்வர்களின் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்றும் இந்த சர்வேயில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் சுவாரசியமான பதில்களை அளித்துள்ளனர்.

யார் ?

யார் ?

அதன்படி இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்று இந்தியா டுடே சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் சிறப்பான முதல்வர் என்று பதில் அளித்துள்ளனர். இரண்டாவது முறையாக இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் கருத்து கணிப்பில் ஆதித்யநாத் இந்த சிறப்பை பெறுகிறார். இவருக்கு 18% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதில் டாப் 10ல் இருக்கும் ஒரே பாஜக முதல்வரும் இவர்தான்.

மூன்று வருடம்

மூன்று வருடம்

யோகி ஆதித்யநாத் கிட்டத்தட்ட மூன்று வருட ஆட்சியை நிறைவு செய்துவிட்டார். இதில் நிறைய விமர்சனங்களை சந்தித்துள்ளார். அதீத வன்முறை, என்கவுண்டர், போலீஸ் அத்துமீறல் என்று நிறைய புகார்கள் இவர் அரசின் மீது இருக்கிறது. அதே சமயம் இவர் பொருளாதரத்தை நன்றாக உத்தர பிரதேசத்தில் முன்னேற்றி உள்ளார். உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வருகிறது என்று நற்பெயரும் எடுத்து இருக்கிறார்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இதுதான் இந்தியாவின் பெஸ்ட் முதல்வராக இவர் தேர்வாக காரணம் ஆகும். மொத்தம் 12141 பேரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. 67% கிராமத்திலும், 33% நகரத்திலும் கேட்கப்பட்டது . 97 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 194 சட்டமன்ற தொகுதிகளிலும் கேள்வி கேட்கப்பட்டது. 19 மாநிலங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டது. இதில்தான் யோகி ஆதித்யநாத் நாட்டின் மிக சிறந்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்து யார்

அடுத்து யார்

இதற்கு அடுத்தபடியாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். இவருக்கு 11% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் 11% மக்கள் ஆதரவு அளித்துள்ளார். மூன்றாவது இடத்தில் 10% ஆதரவுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இருக்கிறார். இந்தியாவில் அதிக மக்கள் ஆதரவு இருப்பதாக கருதப்படும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் டாப் 3 இடங்களை பெறவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+