தலைக்கு வெள்ளை கலர் டை.. ஸீரோ பவர் கண்ணாடி.. வீல் சேரில் வந்த "வயசான" இளைஞரை அள்ளி சென்ற போலீஸ்!
வயதானவர் போல வேடமிட்டு விமானத்தில் பயணம் செய்ய வந்த இளைஞர் கைதானார்
டெல்லி: வெள்ளை கலர் டை அடித்து கொண்டு.. ஸீரோ பவர் கொண்ட மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு.. வீல் சேரில் வந்த "வயசான" இளைஞரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல். 32 வயதாகிறது. இவருக்கு நியூயார்க் செல்ல வேண்டி வந்தது. ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் இல்லை. அதனால் போலி பாஸ்போர்ட் ஒன்றை ரெடி பண்ணினார்.

தன்னுடைய பெயரை அம்ரிக் சிங் என்றும் வயசு 81 என்றும் போலியான பாஸ்போர்ட் தயார் செய்தார். அதை எடுத்து கொண்டு, டெல்லி இந்திரா காந்தி ஏர்போர்ட்க்கும் வந்தார்.
பாஸ்போர்ட்டில் இருப்பதைபோலவே, தாடி, தலைமுடிக்கு வெள்ளை கலர் டை அடித்து கொண்டார்.
ஸீரோ பவர் கொண்ட கண்ணாடியையும் அணிந்து கொண்டார். இது எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாரும் நம்ப வேண்டும் என்பதற்காக, வீல் சேரிலும் அங்கு வந்தார்.
அப்போது அதிகாரிகள் வழக்கமான நடைமுறையின்படி உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். இளைஞரின் பாஸ்போர்டையும் வாங்கி பார்த்தனர். அதில், வயசுக்கும், தோற்றத்துக்கும் கொஞ்சம்கூட சம்மந்தமே இல்லாததை கண்டு சந்தேகம் அடைந்தனர். அதனால் அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர்.
In two separate incidents, #CISF nabbed two passengers, one each for impersonation and carrying dual passports at IGI Airport, New Delhi. Passengers handed over to Delhi Police officials. pic.twitter.com/Mo7Gazeeox
— CISF (@CISFHQrs) September 9, 2019
81 வயசுக்கு உரியவர் போலவே நடை, உடை, பாவனை இல்லை என்பது தெளிவாக தெரிந்ததால், அவரை தனியாக அழைத்து சென்ற அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள்.
அப்போதுதான் அவர் 32 வயதுடைய இளைஞர் என்பதும், பாஸ்போர்ட் இல்லாததால் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளதும் உறுதியானது. இதையடுத்து, ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டில் குடியேற்ற அதிகாரிகளிடம் இளைஞர் ஒப்படைக்கப்பட்டார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications