டெல்லியில் ஷாக்! ரயில்வே ஸ்டேஷனில் மின்கம்பத்தை தொட்ட இளம்பெண்.. துடிதுடித்து பலி.. அலறிய பயணிகள்
டெல்லி: டெல்லி ரயில் நிலையில், நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவர் தேங்கியிருந்த மழைநீரில் மிதிக்காமல் இருப்பதற்காக அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு இளம்பெண் துடிதுடித்து பலியாகினார்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் இன்று அதிகாலை ஒரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லி ரயில் நிலையத்தில் மழை நீரில் மிதிக்காமல் இருக்க மின் கம்பத்தை பிடித்த இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

கிழக்கு டெல்லியில் உள்ள பரீத் விஹார் பகுதியில் வசித்து வரும் ஷாக்சி அகுஜா என்ற பெண் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ரயில் நிலையம் வருகை தந்தார். அவருடன் இரண்டு பெண்கள் மற்றும் 3 குழந்தைகளும் வந்து இருந்தனர். டெல்லியில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி கிடந்தது. ரயில் நிலையத்திலும் தண்ணீர் தேங்கி கிடந்ததாக சொல்லப்படுகிறது.
மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி: இந்த தேங்கி கிடந்த தண்ணீரில் மிதிக்காமல் இருப்பதற்காக ஷாக்ஷி அகுஜா அருகில் இருந்த மின் கம்பத்தை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவருடன் வந்த சகோதரி மாதவி சோப்தா என்பவரும் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார். உடண்டியாக அங்கு இருந்த பயணிகள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
எனினும், ஷாக்ஷி அகுஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மாத்வி சோப்டா காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இளம்பெண் தொட்ட அந்த மின் கம்பத்தின் அடிப்பகுதியில் வயர் ஒன்று வெளியே தொங்கிக் கொண்டு இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
பயணிகள் குற்றச்சாட்டு: எனவே, மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து ஷாக் அடிக்க இதுவே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அலட்சியமாக செயல்பட்ட ஊழியர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரயில்வே ஊழியர்களின் அலட்சியமே இளம்பெண் மரணத்திற்கு காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு காரணமான ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, வரும் காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வைக்கும் கோரிக்கையாக இருந்தது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications