வில் யூ மேரி மீ.. நடுவானில் லவ் ப்ரொபோஸ் செய்த பெண்.. அசந்துபோன காதலன்
டெல்லி: விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது தூங்கிக் கொண்டு வந்த தனது ஆண் நண்பரிடம் வித்தியாசமாக லவ் ப்ரொபோஸ் செய்த இளம்பெண்ணின் அசத்தல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காதலிப்பதே கடினமான காரியம். அந்தக் காதலை உரிய பெண்ணிடமோ, ஆணிடமோ சொல்வது என்பது அதைவிட சவாலான காரியம். லெட்டர், மெயில், மெசேஜ், இன்ஸ்டா, பேஸ்புக் போன்றவை மூலம் எல்லாம் காதலைச் சொல்லி வந்த காலம் எல்லாம் காணாமல் போய்விட்டது. டிசைன் டிசைனாக யோசித்து மெனக்கெட்டு வித்தியாசமான முறையில் தங்களது காதலை ப்ரொபோஸ் செய்து வருகின்றனர் இன்றைய இளைஞர்கள்.

காதலிப்பதில் உள்ள சுவாரஸ்யமே அதில் உள்ள மெனக்கெடல்கள்தான். அந்த வகையில், விமானத்தில் உறங்கிக் கொண்டு வந்த தனது நண்பரிடம் காதலைச் சொல்ல இளம்பெண் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க..
ஐஸ்வர்யா பன்சால் என்ற இளம்பெண் தனது ஆண் நண்பரான அமுல்யா கோயல் என்பவருடன் விமானத்தில் சென்றுள்ளார். அப்போது, தனது ஆண் நண்பரிடம் எப்படியாவது இன்று காதலைச் சொல்லி அசத்திவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. இதற்காக விமான ஊழியர்களிடம் முன்னரே கூறிய ஐஸ்வர்யா சில சர்ப்ரைஸான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இருவரும் விமானத்தில் ஏறி தங்களது இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அமுல்யா கோயல் உறங்கத் தொடங்கியுள்ளார். இதையடுத்து, அவசர அவசரமாக ஐஸ்வர்யா தனது ஆண் நண்பர் உறங்கியது குறித்து ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அடுத்த சில விநாடிகளில் விமானத்தில் உள்ள ஒலிபெருக்கியில் இருந்து அமுல்யா கோயலுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு காத்திருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திடுக்கிட்ட அமுல்யா கோயல் தனது பெயரைக் கூப்பிடுவது தெரிந்ததும் தூக்க கலக்கத்தில் எழுந்து செல்கிறார். ஐஸ்வர்யா அவரது எதிரே நடந்து வந்து மண்டியிட்டு தனது காதல் குறித்து ப்ரொபோஸ் செய்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார். பின்பு, தான் மறைத்து வைத்திருந்த மோதிரம் ஒன்றையும் அவரது விரலில் மாட்டிவிட்டு அசத்தியுள்ளார்.
இதற்கிடையே இருக்கைகளில் அமர்ந்திருந்த நான்கு பேர் வில் யூ மேரி மீ என்ற வாசகங்கள் கொண்ட பேப்பரை பிடித்தபடி திரும்பியதுதான் ஹைலைட். விமானம் முழுவதும் சிரிப்பும், சந்தோஷமும் பொங்கியது. ஐஸ்வர்யாவும், அமுல்யா கோயல் இருவரும் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர், ஐஸ்வர்யா பன்சால், அமுல்யா கோயல் இருவருக்கும் விமான ஊழியர்கள் பரிசு கொடுத்து மகிழ்வித்தனர்.
இந்த லவ் ப்ரொபோஸல் வீடியோவை ஐஸ்வர்யா பன்சால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த நிலையில், ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications