உட்காருயா.. உங்க அப்பாவே என் கூட இருந்தவர் தான்.. பாஜக எம்பியிடம் டென்ஷனான கார்கே.. பரபரத்த ராஜ்யசபா
டெல்லி: ‛‛உங்க அப்பாவே என் கூட இருந்தவர் தான். ஏ உட்காருயா'' என்று ராஜ்யசபாவில் பாஜக எம்பியும், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனுமான நீரஜ் சேகரை பார்த்து மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக கூறியது பரபரப்பை கிளப்பியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஜனாதிபதி திரெளபதி முர்மு லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அதன்பிறகு கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதையடுத்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசி வந்தனர். நேற்று முன்தினம் ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
அப்போது மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே, ‛‛கடந்த 2013ம் ஆண்டில் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 என்று இருந்தது. அப்போது அவர் இந்திய ரூபாய் என்பது ஐசியூவில் இருப்பதாக கூறினார். ஆனால் இப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 ஆக உள்ளது'' என்று கூறினார்.
இதை கேட்டதும் முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் மகனும், தற்போதைய பாஜகவின் ராஜ்யசபா எம்பியுமான நீரஜ் சேகர் எழுந்து மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபமான மல்லிகார்ஜுன கார்கே, நீரஜ் சேகரை பார்த்து,‛‛உங்களின் அப்பா என்னுடன் தான் இருந்தார். நீங்கள் என்ன பேசுகிறீர்கள். உட்காருங்கள்'' என்று காட்டமாக கூறினார். மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த பதிலடி என்பது ராஜ்யசபாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து குறுக்கிட்ட ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் நிதானமாக பேசுங்கள் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மல்லிகார்ஜுன கார்கே பேசுவது மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆனால் நீரஜ் சேகரை வீடியோவில் இடம்பெறவில்லை. இருப்பினும் மல்லிகார்ஜுன கார்கே டென்ஷனானதால் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர், நீரஜ் சேகரின் பெயரை கூறி அமரும்படி கூறுவது இடம்பெற்றுள்ளது.
மேலும் மல்லிகார்ஜுன கார்கேவை டென்ஷனாக்கிய நீரஜ் சேகர் யார் என்றால் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் ஆவார். சந்திரசேகர் நம் நாட்டின் பிரதமராக 1000 நவம்பர் 10ம் தேதி முதல் 1991 ஜுன் மாதம் 21ம் தேதி வரை பிரதமராக இருந்தார். ஜனதாதளம் கட்சி பிளவுப்பட்ட நிலையில் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த நிலையில் மத்தியில் அமைந்த மைனாரிட்டி அரசின் பிரதமராக அவர் செயல்பட்டார். சந்திரசேகர் உத்தர பிரசேத மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது அவர் மறைந்துவிட்டார். இவர் முதலில் காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சி, அதன்பிறகு காங்கிரஸ், பிறகு ஜனதா கட்சி, அதன் பிறகு ஜனதாதளம் கட்சியில் செயல்பட்டவர்.
சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் செயல்பட்டார். தனது தந்தை சந்திரசேகர் மரணத்தை தொடர்ந்து உத்தர பிரதேச பலியா லோக்சபா தொகுதிக்கு கடந்த 2007 ம் ஆண்டில் இடைத்தேர்தல் நடந்தது. அதில் நீரஜ் சேகர் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2009ல் லோக்சபா தேர்தலில் அதே தொகுதயில் ககளமிறங்கி வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 2019ல் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகிய நீரஜ் சேகர் உடனடியாக பாஜகவில் இணைந்தார்.கடந்த 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பலியா தொகுதியல் பாஜக சார்பில் நீரஜ் சேகர் போட்டியிட்டார். ஆனால் அவர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சனாதன் பாண்டேவிடம் தோற்றார். தற்போது அவர் பாஜக ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் நீரஜ் சேகர் குறுக்கிட்டபோது உங்களின் தந்தை என்னுடன் தான் இருந்தார் என்று கார்கே காட்டமாக கூறியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications