பெட்ரோல் டேங்கில் காதலி.. பைக் ஓட்டியபடியே கட்டிப்பிடித்து ரொமான்ஸ்.. முகம் சுளித்த வாகன ஓட்டிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பைக்கின் பெட்ரோல் டேங்கில் தனது காதலியை அமர வைத்துக் கொண்டு கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்து கொண்டே ஆபத்தான முறையில் வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச்செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சாலைகளில் சாசகம் என்ற பெயரில் 2 கே கிட்ஸ்கள் சிலர் ஆபத்தான முறையில் வாகனம் ஒட்டிச் செல்வதை அவ்வப்போது காண முடிகிறது. தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்வதோடு, சக வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இவர்களின் செயல்பாடு அமைகிறது. சென்னை போன்ற வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் மிகுந்த இடங்களில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி அவ்வப்போது சில இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் இப்படி செல்வதை காண முடியும்.

Youth who had a romance with his girlfriend while riding a bike in delhi busy road

சில நேரங்களில் போலீசிடம் சிக்குவதும் உண்டு. இது ஒரு வகை என்றால், சில இளைஞர்களே தங்கள் காதலியுடன் பைக்கிலேயே சல்லாபத்தில் ஈடுபடுவது முகம் சுளிக்க வைப்பதோடு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறார்கள். அதுபோலத்தான் தலைநகர் டெல்லியில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் காதலியை பெட்ரோல் டேங்கில் அமர வைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் ரொமான்சில் ஈடுபட்டது சக வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், டெல்லியில் உள்ள மங்கோல்புரி வெளி வட்ட சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கின்றன. அப்போது, பெட்ரோல் டேங்கில் தன்னை பார்க்குமாறு காதலியை அமர வைத்து இருந்த இளைஞர் ஒருவர், அவருடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட படியே பைக்கை அதிவேகத்தில் ஓட்டி செல்கிறார்.

Youth who had a romance with his girlfriend while riding a bike in delhi busy road

வளைந்து நெளிந்து பைக் சென்று கொண்டு இருக்கிறது. இதைபார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. டெல்லி போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் இந்த வீடியோ சென்ற நிலையில், வீடியோவை பகிர்ந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இது போன்ற போக்குவரத்து விதி மீறல்களை பார்த்தால் டெல்லி போக்குவரத்து போலீசின் சென்டினல் செயலியில் தகவல் தெரிவிக்குமாறு பதிவிட்டுள்ளது.

சாலையில் இப்படி அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டதோடு, ஆபத்தான முறையில் பைக்கை ஓட்டிச்சென்றது குறித்து நெட்டிசன்கள் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இருவருக்கும் அபராதம் போடுவதோடு நிறுத்தக்கூடாது. கைதும் செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல சில நெட்டிசன்கள் இருவருமே ஹெல்மெட்டும் அணியவில்லை அதையும் கவனித்து அபராதம் விதியுங்கள் என்று டெல்லி போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக கடந்த மாதமும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில் பைக்கில் பெட்ரோல் டேங்கில் அமர வைத்து காதலிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டும், கட்டிப்படித்த படியும் இளைஞர் ஒருவர் சென்றார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+