சோஷியல் மீடியா மூலம் வருமானம் வருதா? ஆகஸ்ட் 31க்குள் "இதை" செய்யணும்.. இல்லைனா பிரச்சனை ஆகிடும்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து வருமானம் ஈட்டும் நபர்கள், தங்களது வருமானத்தை முறையாக கணக்கிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான ஆகஸ்ட் 31 காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

இந்த காலத்தில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் வருமானம் ஈட்டுவது முக்கியமான தொழிலாக மாறிவிட்டது. இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை பலரும் சமூக வலைத்தளங்களில் கன்டென்ட் கிரியேட்டர்களாக பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது.

content creators

வருமானம்

யூடியூப் விளம்பர வருமானம், இன்ஸ்டாகிராம் விளம்பர ஒப்பந்தங்கள், விற்பனை மூலம் கிடைக்கும் கமிஷன், சந்தா கட்டணம், சூப்பர் சாட், சமூக வலைத்தள நிறுவனங்கள் வழங்கும் தொகை என பல்வேறு வழிகளில் இப்போது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு பல வழிகளில் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

முன்பு ஒரு காலத்தில் சமூக வலைத்தளங்கள் என்பது வெறுமன வீடியோ, போட்டோவை பகிரும் தளமாக இருந்த நிலையில், இப்போது அது தொடர்ந்து வருமானம் ஈட்டும் தொழிலாக மாறியிருக்கிறது. அதை தான் வருமான வரி கணக்கில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருமானம் தொழில் அல்லது தொழில்முறை வருமானமாக கருதப்படும்.. இதில் யூடியூப் விளம்பர வருமானம், இன்ஸ்டாகிராம் விளம்பர ஒப்பந்தங்கள், விற்பனை கமிஷன், ரசிகர்கள் வழங்கும் தொகை, உறுப்பினர் கட்டணம், சூப்பர் சாட், பொருட்கள் மற்றும் இணையவழி தயாரிப்புகள் மூலம் கிடைக்கும் வருமானம் என அனைத்தையும் கணக்கு காட்ட வேண்டும்.

பல வழிகளில் வருமானம்

ஒரு கன்டென்ட் கிரியேட்டருக்கு ஒரே மாதத்தில் பல்வேறு வழிகளில் பணம் கிடைக்கலாம். எனவே சிறிய தொகையாக கிடைக்கும் வருமானத்தையும் தவறாமல் கணக்கு காட்ட வேண்டியது அவசியமாகும். இதுபோன்ற கன்டென்ட் கிரியேட்டர்கள் ஐடிஆர் பைல் செய்யும்போது அதற்கான விதிமுறைகளை முறையாக படித்து பார்க்க வேண்டும். பெரும்பாலான கன்டென்ட் கிரியேட்டர்கள் ஐடிஆர்-4 படிவத்தையே பயன்படுத்த வேண்டி இருக்கும். சிலர் மட்டும் ஐடிஆர்-3 படிவத்தை பயன்படுத்த வேண்டி இருக்கலாம்!

மேலும், சில கன்டென்ட் கிரியேட்டர்கள் வருமான வரி சட்டத்தின் 44AD பிரிவை பயன்படுத்தலாம். அதேநேரம் அனைத்து கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் ஒரே ஐடிஆர் முறை என சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் வருமான முறை மாறும் என்பதால் ஒவ்வொரு கன்டென்ட் கிரியேட்டர்களும் தங்களது வருமானம் மற்றும் தகுதிக்கு ஏற்ற படிவத்தை தேர்வு செய்ய வேண்டும்.

கவனிக்க வேண்டியவை

வருமான வரி மட்டுமின்றி, சில கன்டென்ட் கிரியேட்டர்கள் ஜிஎஸ்டி மற்றும் டிடிஎஸ் வரியும் செலுத்த வேண்டி இருக்கும். ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்போருக்கு, ஜிஎஸ்டி கட்ட வேண்டி இருக்கலாம். சில மாநிலங்களில் இந்த வரம்பு ரூ.10 லட்சமாகவும் இருக்கிறது. எனவே, ஐடிஆர் பைல் செய்வதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை விதிகளை சரியாக படித்து பாருங்கள்! மேலும், நிறுவனங்களிடம் இருந்து இலவசமாக பெறப்படும் செல்போன், கேமரா, சுற்றுலா பேக் ஆகியவற்றையும் தவறாமல் குறிப்பிட வேண்டும். இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், கவனமாக ஐடிஆர் தாக்கல் செய்யுங்கள!

யூடியூப் வியூஸ்

இது ஒரு பக்கம் இருக்க.. யூடியூப் தனது வியூஸ் எண்ணிக்கை கணக்கிடும் முறையிலும் மாற்றம் செய்கிறது. ஆகஸ்ட் 24 முதல் ஒரு வீடியோவை ஒருவர் ஓபன் செய்தாலே அது ஒரு வியூவாக கணக்கிடப்படும். இதனால் வியூஸ் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இருப்பினும், இதனால் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு தானாகவே அதிக வருமானம் கிடைக்காது. ஏனென்றால் வருமானத்தைக் கணக்கிட தொடர்ந்து engaged views என்ற முறையையே யூடியூப் பயன்படுத்தும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+