யூடியூபில் லட்சக்கணக்கில் பாலோயர்ஸ்! வாங்கிய வாக்குகளை பாருங்க.. டெல்லி தேர்தலில் சுவாரசியம்
டெல்லி: டெல்லி தேர்தலில் மாளவியா நகர் தொகுதியில் மெக்நாத் என்ற யூடியூபர் ஒருவரும் போட்டியிட்டார். சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பாலோயர்களை கொண்ட மெக்நாத், யூடியூப்பில் தீவிரமாக பிரசாரமும் செய்தார். ஊடகங்களில் அதிக கவனம் ஈர்த்த அவருக்கு ஓட்டுக்களும் அதிக அளவில் விழும் என்று எதிர்பார்த்திருந்தார் ஆனால், நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளை விட குறைவான வாக்குகளே விழுந்துள்ளன.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக சில சுவாரசிய தகவல்களும் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் டெல்லி மாளவியா நகர் தொகுதியில் பல லட்சக்கண்க்கான பாலோயர்களை கொண்ட யூடியூபர் ஒருவர் போட்டியிட்டார். அவர் நோட்டாவுக்கு கீழ் வாக்குகளை பெற்ற சுவாரசியமும் அரங்கேறியுள்ளது.
35 வயதான மெக்நாத் என்ற யூடியூபர் மாளவியா நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். மாளவியா நகர் தொகுதியில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பாரதி போட்டியிட்டதால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியானது. டெல்லியில் அதிகம் கவனம் பெறும் தொகுதிகளில் ஒன்றான மாளவியா நகரில் போட்டியிட்ட யூடியூபர் மெக்நாத், பிரசார பாடல் ஒன்றையும் வெளியிட்டார்.
இந்த பிரசார பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆனது. பாடல் வெளியிட்ட சில நிமிடங்களில் 38 ஆயிரம் பார்வையாளர்களை கடந்தது. டெல்லியில் உள்ள மோசமான சாலைகள், குடிநீர் பிரச்சினைகள் ஆகியவற்றை நையாண்டியாக குறிப்பிட்டு வீடியோவும் வெளியிட்டு இருந்தார் மெக்நாத். சோம்நாத் பாரதி , டெல்லி பாஜகவின் மூத்த தலைவர் சதீஷ் உபாத்யாய் ஆகிய முக்கிய விஐபிகள் போட்டியிட்ட போதும் ஊடக கவனம் மெக்நாத்திற்கு கிடைத்தது.
டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யூடியூப்பில் பல லட்சக்கணக்கான பாலோயர்கள் இருந்ததால், ஓட்டுகளும் ஆயிரக்கணக்கில் விழுந்திருக்கும் என்று அவர் எதிர்பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு வெறும் 192 வாக்குகளே கிடைத்துள்ளன. நோட்டாவுக்கும் கீழ் இவருக்கு வாக்குகள் கிடைத்ததுதான் சுவாரசியம். நோட்டாவுக்கு கூட 532 ஓட்டுகள் விழுந்திருந்தன.
கள அரசியல் வேறு, சமூக ஊடகங்களில் அரசியல் செய்வது வேறு என்பதற்கு சிறந்த உதாரணம் இதுதான் என்ற ரீதியில் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். யூடியூபர் மெக்நாத் ’பேனா’ சின்னத்தில் போட்டியிட்டு இருந்தார். மோடி செய்ததை நான் முயற்சித்து பார்க்க போகிறேன் என்று கூறி தனது பிரசார வீடியோவை கடந்த 10 ஆம் தேதி பதிவிட்டு இருந்தார். இவர் தனது வேட்பு மனுவில் 55.1 லட்சம் அசையும் சொத்துக்களும், ஒரு லட்சத்திற்கான பொறுப்புகளும் இருப்பதாக கூறியிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications