"பெற்றோர்கள் உடலுறவு.." காமெடினு வாய்க்கு வந்ததை மிக கேவலமாக பேசிய யூடியூப் பிரபலம்! வெடித்த சர்ச்சை
டெல்லி: சமூக வலைத்தள பிரபலமான ரன்வீர் அல்லாபாடியா இந்தியா காட் லாட்டன்ட் நிகழ்ச்சியில் கூறிய கருத்து மிகப் பெரிய சர்ச்சையானது. அவர் கூறிய மிக கேவலமான கருத்துக்கு இணையத்தில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரன்வீர் அல்லாபாடியா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
இப்போதெல்லாம் சினிமா பிரபலங்களுக்கு இணையாக சமூக வலைத்தள பிரபலங்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். சில சமூக வலைத்தள பிரபலங்களுக்குச் சிறிய நடிகர்களைவிட அதிக ரசிகர்கள் உள்ளனர்.

சர்ச்சை:
இவ்வளவு பேர் நம்மை பின்பற்றுகிறார்கள் என்றால் பொறுப்பாக இருக்க வேண்டும். தேவையில்லாத கருத்துகளைக் கூறக்கூடாது. ஆனால், இங்குப் பிரபல யூடியூபர் பீர்பைசெப்ஸ் என்று அழைக்கப்படும் ரன்வீர் அல்லாபாடியா சமீபத்தில் மிகக் கேவலமான ஒரு கருத்தைக் கூறியிருந்தார். ரெய்னாவின் இந்தியா காட் லாட்டன்ட் நிகழ்ச்சியில் கமெடி என்ற பெயரில் கருத்துகளைக் கூறிய நிலையில், இப்போது தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
கேவலமான பேச்சு:
அதாவது அந்த இந்தியா காட் லாட்டன்ட் நிகழ்ச்சியில் போட்டியாளரைப் பார்த்து, "நீங்கள் உங்கள் பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா அல்லது ஒரு முறை அவர்களுடன் சேர்ந்துகொண்டு அதை மொத்தமாக நிறுத்துவீர்களா" என்று மிக ஆபாசமாகக் கேவலமாகப் பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு இணையத்தில் பரவிய நிலையில், அனைத்து தரப்பினருமே அதை மிக கடுமையாகக் கண்டித்தனர்.
மன்னிப்பு கோரினார்:
இந்தச் சூழலில் தான் அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், "இந்தியா காட் லேடண்டில் நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது பேச்சு முறையற்றது.. அது காமெடியாக கூட இல்லை. காமெடி குறித்து எதுவும் தெரியாமல் பேசி விட்டேன். அதற்காக நான் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நான் சமூக வலைத்தளங்களை இதுபோல பயன்படுத்த விரும்பவில்லை. நான் அப்படிக் கூறியதற்கு எந்தவொரு நியாயத்தையும் விளக்கத்தையும் கூட சொல்லப் போவதில்லை. நான் மன்னிப்பு கேட்க மட்டுமே இந்த வீடியோ வெளியிடுகிறேன். நான் செய்தது ரொம்ப தவறு. பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை எல்லா வயதினரும் பார்க்கிறார்கள்.
பொறுப்பாக இருப்பேன்:
எனவே பொறுப்பாக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் நான் பேசியிருக்கக்கூடாது. அதை ஒரு பாடமாக நான் எடுத்துக் கொள்வேன். இனிமேல் இதுபோல பொறுப்பு இல்லாமல் பேச மாட்டேன். பேசும் முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிப்பேன். அந்த குறிப்பிட்ட வீடியோவை நீக்கச் சொல்லிவிட்டேன். மீண்டும் மன்னிப்பு மட்டும் கேட்க விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
யார் அந்த ரன்வீர்:
ரன்வீர் அல்லாபாடியாவுக்கு வட மாநிலங்களில் மிகப் பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர். அவரது பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் சும்மாவே பல லட்சம் வியூஸ்களை அசால்டாக இருக்கும். கடந்த ஆண்டு டிஜிட்டல் கன்டெண்ட் கிரியேட்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கிய நிலையில், அதில் விருது பெற்ற படைப்பாளர்களில் இந்த ரன்வீரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications