தோனி ஓய்வு.. அதென்ன ராஞ்சிக்கு மட்டும்.. இந்தியாவுக்கே தரலாமே.. நெட்டிசனுக்கு ஜொமாட்டோ கிண்டல் பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிரிக்கெட் வீரர் மகிந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்ததை அடுத்து அவர் பிறந்த ராஞ்சி மக்களுக்கு மட்டும் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ சலுகை கொடுத்ததை இந்தியா முழுவதும் கொடுக்குமாறு கேட்ட நெட்டிசனுக்கு ஜொமாட்டோ நிறுவனம் அதிர்ச்சியளிக்கும் பதிலை அனுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர் தோனி ஏற்கெனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.

அவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி கடந்த சுதந்திரத் தினத்தன்று அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட்

இந்த நிலையில் தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் ராஞ்சி மக்களுக்கு ஜொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவுக்கு சிறப்பு சலுகையை வழங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராஞ்சி

ராஞ்சி

ஆனால் மற்ற மாநில மக்களுக்கு சற்று மனவேதனையாகவே இருந்தது. இதனால் ட்விட்டர்வாசி ஒருவர் ஜொமாட்டோவிடம் ராஞ்சிக்கு மட்டுமான ஆஃபர் குறித்து கேள்வி எழுப்பினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்கையில், அவர் ராஞ்சியில் பிறந்திருக்கலாம்.

சிரிப்பு

சிரிப்பு

ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் அந்த மாமேதை மீது அன்பு செலுத்திறார்கள். எனவே இந்தியா முழுவதும் சிறப்பு ஆஃபரை ஜொமாட்டோ ஏன் கொடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினார். அதற்கு ஜொமாட்டோ நிறுவனமோ அனைவருக்கும் சிரிப்பை வரவழைக்கும் பதிலை அளித்துள்ளது.

புண்ணான வயிறு

புண்ணான வயிறு

அந்த நிறுவனம் அந்த ட்விட்டர்வாசிக்கு பதில் அளிக்கையில் இந்தியாவிற்கு ஒரு லெஜென்ட்டை பரிசளித்த ராஞ்சி நகரத்திற்கு ஒரு பரிசு அளிக்கிறோம் என தெரிவித்திருந்தது. இந்த பதில் சமூகவலைதளங்களில் வைரலானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+