லாக்டவுன் 4.0: 600 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் ஜொமாட்டோ.. 6 மாதங்களுக்கு 50% ஊதியம்.. அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லாக்டவுன் 4.0 அறிவிக்கப்பட்டதை அடுத்து 600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமாட்டோ முடிவு செய்துள்ளது. மற்ற தொழிலாளர்களுக்கு 50 சதவீதம் ஊதிய குறைப்பை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Recommended Video

    Zomato to fire 13% employees | சோகத்தில் ஊழியர்கள்

    நாடு முழுவதும் லாக்டவுன் 3.0 அமலில் உள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி லாக்டவுன் 4.0 புதிய விதிகளுடன் அமல்படுத்தப்படும் என்றார்.

    இந்த நிலையில் ஏற்கெனவே கடந்த 3 மாதங்களாக சரிவர ஊதியம் இல்லாமல் பல தொழிலாளர்கள் அவதியடைந்து வருகிறார்கள். அவர்களுள் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட ஊழியர்களும் ஆவர்.

    ஊதியம் இல்லை

    ஊதியம் இல்லை

    கடந்த 3 மாதங்களாக குறிப்பிட்ட நேரம் மட்டும் உணவு டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சரியான ஊதியமின்றி இந்த ஊழியர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே குறைந்த சம்பளத்தை பெற்று வரும் இவர்கள் தற்போது இந்த லாக்டவுன் 4.0 வால் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

    6 மாதங்கள்

    6 மாதங்கள்

    இந்த நிலையில் இதுகுறித்து ஜொமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் கூறுகையில் தேவைக்கு அதிகமாக இருக்கும் 13 சதவீத ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளோம். அதாவது 600 ஊழியர்கள் வரை வேலை இழப்பர். இவர்கள் புதிதாக வேலையை தேடும் வரை பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு 6 மாதங்களுக்கு 50 சதவீத ஊழியம் வழங்கப்படும்.

    பணி நீக்கம்

    பணி நீக்கம்

    அவர்கள் புதிய வேலையை தேடுவதற்கும் உதவப்படும். அது போல் மற்ற தொழிலாளர்களுக்கு 50 சதவீத ஊதிய குறைப்பு அமல்படுத்தப்படும். இது தற்காலிகம்தான். நிலைமை சீரானவுடன் பழைய ஊதியமே அவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்றார். இந்த நிலையில் விரைவில் 600 தொழிலாளர்களையும் கோயல் வீடியோ கால மூலம் தொடர்பு கொண்டு பணிநீக்கம் குறித்து அறிவிப்பார் என தெரிகிறது.

    உணவு டெலிவரி

    உணவு டெலிவரி

    இந்த 600 ஊழியர்கள் உணவு டெலிவரி செய்வோரா அல்லது வேறு துறைகளில் பணியாற்றுவோரா என்பதை அந்த நிறுவனம் சொல்லவில்லை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 540 ஊழியர்களை பணியை விட்டு நீக்கிய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பணி நீக்கத்திற்கு தயாராகி வருகிறது ஜொமாட்டோ. இந்தியா முழுவதும் 185 நகரங்களில் இந்த நிறுவனம் சேவையை தொடங்கியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+