4 மாத கர்ப்பிணி.. பாத்ரூமில் தூக்கில் தொங்கிய பெண்.. கொந்தளித்த உறவினர்கள்.. ஸ்தம்பித்த தர்மபுரி
கர்ப்பிணி தற்கொலையால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தர்மபுரி: 4 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது உறவினர்கள் நடத்திய போராட்டத்தினால் தர்மபுரியே ஸ்தம்பித்துவிட்டது.
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த மானியதஅள்ளி மலைப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசன். இவரது மனைவி பெயர் வனிதா என்கிற பவித்ரா.
பிஇ படித்துள்ளார்.. சேலம் மாவட்டம் ஒமலூர் அடுத்த வெங்காயனூரை சேர்ந்தவர்.. இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. இப்போது வனிதா 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.

திருமணம்
மாணிக்கவாசன் ராணுவத்தில் வேலை பார்ப்பதாக சொன்னதால்தான், வனிதாவை அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.. ஆனால், இந்த 5 மாத காலமாக, ராணுவ வேலைக்கு மாணிக்கவாசகன் போகவே இல்லையாம்.. இதைதவிர, வரதட்சணை பிரச்சனையும் வனிதாவிடம் கிளப்பி வந்துள்ளார்.

மாமியார்
நேற்று மகளை பார்ப்பதற்காக வனிதாவின் அம்மா சென்றுள்ளார்.. ஆனால், மாணிக்கவாசன் மாமியாரையும், வனிதாவையும் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் இன்று விடிகாலை வனிதா, பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், தொப்பூர் போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும் விரைந்து வந்து, வனிதாவின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்
இதனிடையே, வனிதாவின் மரணம் கேள்விப்பட்டு உறவினர்கள் திரண்டு வாகனத்தில் வந்துள்ளனர்.. வரும் வழியில் நடுகாட்டில் ஒரு ஆம்புலன்ஸ் நின்றிருந்தது.. அந்த ஆம்புலன்ஸ்ஸை ஒரு மரத்தடியில் நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் மது அருந்தி இருந்துள்ளனர்.. அந்த ஆம்புலன்ஸில்தான் வனிதாவின் சடலம் இருந்துள்ளது... இதைக்கண்ட உறவினர்கள் மேலும் அதிர்ச்சியுற்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரணம்
பிறகு, வனிதாவின் சடலத்தை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... எனினும் உறவினர்கள் விடவில்லை.. வனிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, அந்த ஆம்புலன்ஸை எடுக்க விடாமல் தடுத்தனர்.. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதுடன், சிலர் ஆம்புலன்ஸ்சின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர்... தருமபுரி மருத்துவமனை முன்பும் சாலை மறியலை நடத்தினர்.

சமாதான பேச்சுவார்த்தை
போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.. அதனால், குண்டு கட்டாக அவர்களை வண்டியில் ஏற்றி கைது செய்ததால் அங்கு தள்ளுமுள்ளும் பரபரப்பும் ஏற்பட்டது... பிறகு போலீசாரை கண்டித்து சாலையில் படுத்தும், ஜீப்பை தடுத்தும் போராட்டம் நடத்தினர். இதனால் சேலம் பிரதான சாலையில் டிராபிக் ஜாம் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

போராட்டம்
இறுதியில் தர்மபுரி ஆர்டிஓ (பொறுப்பு) தேன்மொழி, சம்பவ இடத்துக்கு வந்து சமாதான நடவடிக்கையில் இறங்கிய பிறகுதான், போராட்டத்தை உறவினர்கள் கைவிட நேர்ந்தது... 4 மாத கர்ப்பிணியின் தற்கொலையும், அவரது உறவினர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications