ஜனநாயகன் ஆஹா ஓஹோனு சொன்னாங்க.. ஒரு வாரத்தில் காத்து வாங்குச்சு.. எடப்பாடி பழனிசாமி கலாய்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து 6 எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டே பல நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் தவெக 100 நாளில் எதையும் செய்யவில்லை. ஜனநாயகன் படம் கூட 100 நாள் ஓடவில்லை. ஒரு வாரத்தில் தியேட்டர்கள் காற்று வாங்கியது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தர்மபுரியில் நடைபெற்ற அதிமுக திருமண நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அடிக்கடி மின்வெட்டு வந்ததால் அவர் கடுப்பானர். எடப்பாடி பேசுகையில், "அதிமுக ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் பம்ப் செட்டுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். இன்றைக்கு தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. நம் கூட்டத்தில் கூட அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

Edappadi Palanisamy

20 லட்சம் கோடி கடன்

இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம். தமிழ்நாடு அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. தவெக அரசு 1.25 லட்சம் கோடி கடன் வாங்கினால் மட்டுமே இந்தாண்டு அரசாங்கம் நடத்த முடியும். ஜோசப் விஜய் தலைமையிலான இந்த தவெக அரசு 5 ஆண்டுகள் இருக்க போவதில்லை. ஆட்சியில் இருந்தால் 10 லட்சம் கோடி 20 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும். கடன் வாங்கினால் மக்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.

ஏதோ நாங்கள் பேசுவதை கேட்டு கைத்தட்டி செல்ல முடியாது. ஒன்றுமே தெரியாதவர்களை எல்லாம் அமைச்சர்களாக்கி, இன்றைக்கு தமிழகத்தை ஆட்சி செய்ய முடியாமல் தட்டு தடுமாறி கொண்டிருக்கிறது. எந்த கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள் மட்டுமே பதில் சொல்கிறார்கள். வேறு எந்த அமைச்சரும் பதில் சொல்வதில்லை. வாய் திறந்து பேசுவதே இல்லை. இந்த மாவட்டத்தில் கே.பி. முனுசாமி இருக்கிறார். அதிமுகவில் இருப்பவர்கள் பல காலம் அமைச்சர்களாக இருந்தனர்.

காற்று வாங்கிய ஜனநாயகன்

பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள். அனுபவம் இருந்தால் மட்டுமே நிர்வாகம் செய்ய முடியாமல். தவெக அமைச்சர்கள் என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசுகிறார்கள். நாங்கள் ஒரு கேள்வி கேட்டால் அவர்கள் ஒரு பதில் சொல்கிறார்கள். விலைவாசி உயர்ந்துவிட்டது. சர்க்கரை விலை, அரிசி விலை உயர்ந்துவிட்டது என்று சொன்னால் ஒரு அமைச்சர் சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்கிறார். நான் என்ன கேட்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இரண்டுக்கும் தொடர்பே இல்லையே என்று கேட்டேன்.

இப்படித்தான் இந்த அரசாங்கம் ஓடுகிறது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓட்டிட்டீங்க. 100 நாள் மக்களுக்கு உருப்படியாக என்ன செய்தீர்கள். என்ன சாதனை செய்தீர்கள். 28,000 கோடி ரூபாய் கடன் வாங்கியது தான் சாதனையா. ஜனநாயகன் என்று ஒரு படம் எடுத்தார்கள். அது அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என கூறினர். கடைசியில் அது ஒன்றுமில்லாமல் போய்விட்டது. 100 நாள் ஆட்சியில் ஜனநாயகன் படம் 100 நாள் ஓடாமல் ஒரே வாரத்தில் காற்று வாங்கியது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+