கும்பலாக வந்து பணம் கேட்டு மிரட்டுகிறார்.. திமுக பெண் நிர்வாகி மீது நகைக்கடைக்கார் புகார்.. வீடியோ
தர்மபுரி: தர்மபுரி அருகே வாங்காத பணத்தை கேட்டு திமுக பெண் நிர்வாகி ஒருவர் தன்னை தாக்கியதாக நகைக்கடைக்காரர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் பிரபு. இவர் அரூர் பகுதியை சேர்ந்த திமுக தொண்டரணி நிர்வாகி ஜெயா என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். தன்னிடம் இருந்த பத்திரம் மற்றும் வங்கி காசோலைகளை கொடுத்து கடன் வாங்கியிருக்கிறார்.

தொடர்ந்து பிரபு இந்த தொகையை கட்டி வந்ததாகவும், கடந்த மாதம் கடனை முழுவதுமாக வட்டியுடன் பணத்தை ஜெயாவிடம் திருப்பி அளித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஜெயாவும் இன்னும் 20 நாட்களில் கடனுக்கு ஈடாக வாங்கிய வங்கி காசோலை மற்றும் பத்திரங்களை திருப்பி தருவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென பிரபுவின் கடைக்கு அடியாட்களுடன் வந்து ஜெயா அவரை ரூ.5 கோடி மிரட்டி செல்போனால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. கடைக்கு வந்து ஜெயா பிரபுவிடம் ரூ.5 கோடி தரவேண்டும் என்று கூறி அவரிடம் வாக்குவாதம் செய்யும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பக நகைக்கடைக்காரர் பிரபு திமுக பெண் நிர்வாகி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், அரூர் பகுதியை சேர்ந்த திமுக தொண்டரணி நிர்வாகி ஜெயா என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தேன். வங்கி காசோலைகள் மற்றும் பத்திரங்களை கொடுத்து தான் கடன் வங்கியிருந்தேன். கடந்த மாதம் முழுவதுமாக பணத்தை வட்டியுடன் ஜெயாவிடம் கொடுத்து முடித்துவிட்டேன். அப்போது அவர் இன்னும் 20 நாட்களில் என்னிடம் வாங்கிய வங்கி காசோலை மற்றும் பத்திரங்களை திருப்பி தருவதாக உறுதியளித்தார்.
ஆனால் கூறியபடி என்னிடம் பத்திரத்தை தராமல், அடியாட்களுடன் வந்து என்னிடம் தகராறு செய்தார். பத்திரத்தை கேட்டதற்கு ரூ.5 கோடி தர வேண்டியது இருக்கிறது. அதை தந்தால் தான் தருவேன் என்றும், நான் வட்டியோடு பணத்தை முழுவதுமாக கொடுத்துவிட்டேன் என்றதற்கு என்னிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து அவர் வைத்திருந்த செல்போனால் என் தலையில் தாக்கியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பிரபு அளித்த பேட்டியில், திமுக நிர்வாகி ஜெயா என்பவரிடம் பணம் வாங்கியிருந்தேன். ஆனால் பணம் முழுவதையும் நான் கொடுத்துவிட்டேன். கந்து வட்டியோடு மோசம். 10 நாளுக்கு 1 லட்சம் எல்லாம் வட்டி போட்டாங்க. ஆனால் வட்டியோடு எல்லாத்தையும் கொடுத்துட்டேன். தற்போது ஆளுங்கட்சி என்பதால் என்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications