அடிதூள்.. முதல்வர் ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி.. உடனே "ஓகே" ஆன கோரிக்கை.. போலீஸ் ஸ்டேஷனில் அதிரடி
அதியமான்கோட்டை போலீஸார் குழந்தைகளுக்கு பூங்கா வசதி தர முதல்வர் உறுதி தந்துள்ளார்
தருமபுரி: குழந்தைகள், காவலர் குடியிருப்பின் பின்புறம் விளையாடுவதற்காக ஒரு பூங்கா வேண்டும் என்று முதல்வரிடம் போலீசார் கோரிக்கை வைத்ததும், அதனை உடனடியாக செய்து கொடுப்பதாக முதல்வர் உறுதி தந்துள்ளார். அதியமான்கோட்டை ஸ்டேஷனில் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது இந்த வாக்குறுதியை தந்துள்ளார்.
திமுக ஆட்சி பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று வருகிறது.. அதற்கேற்றவாறு மக்களுக்கான அறிவிப்புகளும், திட்டங்களும் அவ்வப்போது வெளியாகி கொண்டே இருக்கின்றன.
Recommended Video
பல்வேறு துறைகள் மக்களிடம் நன்மதிப்பை பெற்று வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி மட்டும் அதிருப்திகள் வந்தவண்ணம் உள்ளது..

கட்டுப்பாடு
இதுகுறித்த விமர்சனங்களையும், குறைகளையும் தவிர்க்கும் பொருட்டு, முதல்வர் ஸ்டாலின் சில அதிரடிகளை கையில் எடுத்தார்.. காரணம், காவல்துறை தமிழக முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.. எனவேதான், வன்முறைகள் நிகழாத வண்ணம் மக்களை காக்க வேண்டும் என்றும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.. அதன் ஒருபகுதியாகத்தான், கடந்த வாரம், ரவுடிகளை போலீசார் கைது செய்யும் படலம் நடந்தது.

நிகழ்ச்சிகள்
இந்நிலையில்தான், நேரடியாகவே காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தி உள்ளார்.. சேலம், தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர்.. இதற்காக தொப்பூர் வழியாக தருமபுரி சென்று கொண்டிருந்தார்.. அப்போது, அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் திடீரென நுழைந்தார்.. முதல்வர் உள்ளே வந்ததுமே அங்கிருந்த போலீசார் வெலவெலத்து போனார்கள்..

கேள்விகள்
அங்கிருந்த சேரில் உட்கார்ந்து அந்த ஸ்டேஷனின் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்... வழக்கு பதிவு விசாரணை குறித்தும் கேட்டறிந்தார்.. அதற்கான கோப்புகளையும் ஆய்வறிந்தார்.. அது சம்பந்தமான பல கேள்விகளையும் கேட்டறிந்தார்.. போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள வார விடுமுறை சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்று கேட்டார்.. அதற்கு காவல்துறையினர், தற்போது வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் இடிஆர் குறைப்பு இல்லாமல் இருப்பது, தங்களுக்கு உதவியாக இருப்பதாகவும் பதிலளித்தனர்..

நடவடிக்கை
பிறகு, முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் அனுப்பப்படும் புகார் மனுக்கள் மீது எப்படி விசாரணை நடத்தப்படுகிறது என்று கேட்டார்.. அந்த மனுக்கள் மீது காவல் துறை ஆய்வாளர் நேரடி விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படுகின்றன என்று பதிலளித்தனர். இவ்வளவும் நடக்கும்வரை அந்த ஸ்டேஷனில் இருந்த போலீசார் ஒருவித பதற்றத்துடனேயே காணப்பட்டனர்.

பூங்கா
பிறகு ஸ்டேஷனை விட்டு முதல்வர் வெளியே வந்தார்.. அதற்குள் முதல்வர் ஆய்வு செய்ய வந்திருக்கிறார் என்ற தகவலறிந்து, காவலர்கள் குடியிருப்பில் இருந்த போலீசாரின் குடும்ப உறுப்பினர்கள் வெளிப்புறத்தில் திரண்டு வந்தனர்.. அவர்களிடம் நலம் விசாரித்த முதல்வர், போலீசாரின் குழந்தைகளிடமும் பேசினார்.. காவலர் குடியிருப்பின் பின்புறம் விளையாடுவதற்காக ஒரு பூங்கா வேண்டும் என்று போலீசார் குடும்பத்தினர் முதல்வரிடம் திடீர் கோரிக்கையை வைத்தனர்.. அதனை உடனடியாக செய்து கொடுப்பதாக நம்பிக்கை தெரிவித்த முதல்வர், அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications