'ஆவேச பேச்சு..' தர்மபுரி நாம் தமிழர் மேடையில் ஏறிய திமுகவினர்.. சேர்கள், மைக்குகள் பறந்தன
தர்மபுரி: தமிழக முதல்வரையும் திமுகவினரையும் மோசமாகப் பேசிய நாம் தமிழர் போராட்ட மேடையில் ஏறிய திமுகவினர், பேச்சை நிறுத்தும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட பல ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர்.
இதில் பேரறிவாளனுக்கு மட்டும் மருத்துவ காரணங்களால் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாத இறுதி முதல் அவருக்குத் தொடர்ச்சியாக பரோல் வழங்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் போராட்டம்
இந்நிலையில், ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டும், இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் மொராப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பங்கேற்றார்.

ஆவேச பேச்சு
இக்கூட்டத்தில் அவர் திமுக அரசை மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவினரையும் தமிழக முதல்வரையும் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த திமுகவினர் பேச்சை நிறுத்தும்படி மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மேடையில் நாம் தமிழர் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

சேர், மைக்குகள் பறந்தன
அப்போது மேடையில் இருந்து மைக் கீழே தள்ளிவிடப்பட்டது. மேலும், மேடையிலேயே இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கீழே இருந்து சேர்களும் மேடையை நோக்கி வீசப்பட்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மொராப்பூர் போலீசார், இந்த மோதல் சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.

பாதியில் ரத்தான கூட்டம்
இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் கூட்டம் பாதியிலேயே ரத்தானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் வீடியோ
இந்த வீடியாவை வேலூர் திமுக ஐ.டி. விங்கைச் சேர்ந்த ஒருவரும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "தருமபுரியில் திமுக வேண்டுமானால் தேர்தலில் தோற்று இருக்கலாம். தொண்டனின் பல வருடங்களுக்குப் பிறகு பழைய வீரத்தைப் பார்த்த மகிழ்ச்சி. தருமபுரி மொராப்பூரில் நாம் தமிழர் தம்பிகளை அலறவிட்ட திமுக மொராப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணனுக்கு கோடி நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications