தர்மபுரி ஏரியில் 2 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள்.. ஓவர் நைட்டில் நடந்தது என்ன? பின்னணியில் யார்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி அருகே ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு விட்டது.. அழுகிய மீன்களால் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில், அதிகாரிகள் அவற்றை அகற்றி கிருமிநாசினி தெளித்து புதைத்தனர். மீன்களை ஏரியில் கொட்டியது யார், எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து வருவாய்த்துறையினரும் போலீசாரும் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?

தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகளில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் காணப்படுகின்றன. குறைந்த அளவு நீர், சேறு, சகதி மற்றும் குறைந்த ஆக்சிஜன் உள்ள இடங்களிலும் உயிர்வாழக்கூடியவை இத்தகைய மீன்கள்..

African Catfish Dharmapuri

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்

ஆனால், இந்த வகை கெளுத்தி மீன்கள், மற்ற மீன்களை உணவாக சாப்பிட்டு விடும்.. அவ்வளவு ஏன், தனக்கு உணவு கிடைக்காதபோது தன்னுடைய இனத்தையே கூட சாப்பிடுவிடும.. ஒரு சீசனில் சுமார் 4 லட்சம் முட்டைகள் வரை இடக்கூடியதால், உள்ளூர் மீன் இனங்களுக்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகின்றன.

மேலும், மாசுபட்ட நீரில் வளரும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு உள்ளிட்ட உலோகங்கள் சேரக்கூடும் என்பதால், அவற்றை சாப்பிடுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். முக்கியமாக இதை சாப்பிட்டால், மனிதர்களுக்கு கேன்சர் வரக்கூடிய ஆபத்தும் உள்ளதாம்.. அதனால்தான், இந்த ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களின் வளர்ப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி ஏரியில் கெளுத்தி மீன்கள்

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குண்டலப்பட்டி ஏரியில் சுமார் 2 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைசுஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டலப்பட்டி ஏரி சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுற்றுவட்டார பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வந்த இந்த ஏரி, கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் நீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. ஏற்கனவே ஏரியில் குப்பை மற்றும் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், திடீரென மீன்கள் செத்து மிதந்தது அதிர்ச்சியை தந்துவிட்து.

விஏஓ, டிஆர்ஓ விரைவு

நேற்று அதிகாலை மர்ம நபர்கள் அரசால் தடை செய்யப்பட்ட அழுகிய ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை ஏரியில் கொட்டிவிட்டு சென்றருக்கிறார்கள்.. அழுகிய மீன்களிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது.. இதற்கு பிறகுதான், அந்த பகுதி மக்கள் உடனடியாக ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, காரிமங்கலம் தாசில்தார் சிவகுமார் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். வி.ஏ.ஓ. முருகன், ஊராட்சி செயலாளர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியில் குழி தோண்டப்பட்டது. பிறகு, அங்கு கொட்டப்பட்டிருந்த சுமார் 2 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அகற்றப்பட்டு, அவற்றின் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு குழியில் புதைத்து மூடப்பட்டன.

கொட்டியது யார்? பின்னணியில் யார்?

ஆனால், தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் இவ்வளவு அதிக அளவில் ஏரியில் கொட்டப்பட்டது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த மீன்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, அவற்றை யார் வளர்த்தனர், ஏரியில் கொட்டிவிட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீர்நிலைகளில் ஏற்கனவே குப்பை மற்றும் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது தடை செய்யப்பட்ட மீன்களும் கொட்டப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+