கட்சிதான் முக்கியம்! சீட்டு கிடைக்கலைனாலும்.. களத்தில் செந்தில் குமார் தீவிர பிரச்சாரம்! அந்த மனசு

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரி சிட்டிங் எம்பி டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில் அவர் திமுக வேட்பாளர் ஆ மணிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தருமபுரி சிட்டிங் எம்பி டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு ஆ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவின் அன்புமணி ராமதாஸை எதிர்த்து செந்தில் 574,988 வாக்குகள் பெற்று வென்றார். அன்புமணி 5,04,235 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

DMK sitting MP Senthil Kumar in Dharmapuri campaigns for candidate A Mani

இந்த நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலமும், எம்பி நிதி மூலமும் பலரின் மருத்துவ செலவிற்கும், பல்வேறு படிப்பு தொடர்பான செலவுகளுக்கும் செந்தில் உதவி செய்து வந்தார். ஆனாலும் தொகுதியில் இவரின் பெயர் , கட்சி நிர்வாகிகள் இடையிலான இவரின் உறவு சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது தருமபுரி சிட்டிங் எம்பி டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு ஆ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

வழக்கறிஞரான ஆ மணிக்கு அங்கே சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. இங்கே பாஜக கூட்டணியில் தருமபுரி லோக்சபா தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுகிறார் சவுமியா அன்புமணி. சவுமியாவின் மாமனார் பாமக நிறுவனர், கணவர் அன்புமணி ராமதாஸ் முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் லோக்சபா எம்பி, மாநிலங்களவை எம்பி, பாமக தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் வகித்து வருகிறார்.

இவர்களுக்கு இடையில் அங்கே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இப்போது வரை கள நிலவரப்படி பார்த்தால் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையே அங்கே உள்ளது.

சீட்டு இல்லை என்றாலும்: தருமபுரி சிட்டிங் எம்பி டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில் அவர் திமுக வேட்பாளர் ஆ மணிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

உதாரணமாக நேற்று தருமபுரி- நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம், பண்டஅள்ளி பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு செந்தில் குமார் வாக்கு சேகரித்தார். உடன் தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்லதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

மணி வெற்றிபெற வேண்டும் என்று உள்ளூர் அளவில் அவர் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் எம்பி செந்தில் குமார் இப்படி தீவிரமாக மாற்று வேட்பாளருக்கு பணிகளை செய்வது கவனம் ஈர்த்து உள்ளது.

திமுக கூட்டணி: போட்டியிடும் தொகுதிகள் விவரம் - திமுக - 21 ( வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்பத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளகுறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பூர், தஞ்சாவூர், தேனி , தூத்துக்குடி, தென்காசி, )

காங்கிரஸ் - 9 + புதுச்சேரி (தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர்,, கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறையில் காங்கிரஸ் போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது)

விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)

சிபிஐ - 2 (நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது)

சிபிஎம் - 2 ( மதுரை, திண்டுக்கல்)

மதிமுக -1 (திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது)

இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)

கொமதேக - 1 (நாமக்கல்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+