19 வயசு பையனுடன்.. 36 வயசான என் மனைவி.. தீக்குளிக்க போன ஐஸ் வியாபாரி!
தந்தை - மகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பாகி விட்டது.
Recommended Video

தருமபுரி: "36 வயசான என் பொண்டாட்டி, 19 வயசு பையனுடன் ஓடிப்போய்விட்டார், அவங்க 2 பேரையும் கண்டுபிடிச்சு தாங்க" என்று ஐஸ் வியாபாரி தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
தருமபுரி மாவட்டம் எர்ரனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவர் ஒரு ஐஸ் வியாபாரி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு தமிழ்செல்வி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தீக்குளிக்க முயற்சி
மாரியப்பன் நேற்று திடீரென்று தமிழ்செல்வியுடன் தருமபுரி கலெக்டர் ஆபீசுக்குள் நுழைந்தார். அப்போது தன் உடலில் மண்எண்ணை ஊற்றி கொண்டார். பிறகு மகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றினார். பிறகு மகளுடன் தீக்குளிக்க முயன்றார்.

விசாரணை
இதை பார்த்து பதறி போன பாதுகாப்பு போலீசார், 2 பேரையும் காப்பாற்றினர். விரைந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து அவர்கள் மீது ஊற்றினர். பிறகு யார், என்ன என்று விசாரித்தனர்.

கள்ளக்காதல்
அதற்கு மாரியப்பன், "நான் ஒரு ஐஸ் வியாபாரி. என் மனைவிக்கு 36 வயசாகிறது. மகன் முறையுள்ள 19 வயசு பையனுடன் ஓடிவிட்டார். ஓடிப்போகும்போது, வீட்டிலிருந்த 13 பவுன் நகைகளையும், இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு
அவங்க 2 பேரையும் போலீசார் கண்டுபிடிச்சு தரணும். சுப்ரீம் கோர்ட்டு கள்ளத்தொடர்பு தப்பில்லை என்று தீர்ப்பு சொல்லிடுச்சு. இந்த தீர்ப்பால நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்" என்றார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications