''சென்பகமே.. சென்பகமே..'' பால் பண்ணை நடத்தும் Ex அமைச்சர்! எல்லா கட்சிகளிலும் ஒரு ரவுண்டு வந்தாச்சு
தருமபுரி: திமுக, தேமுதிக, அதிமுக என வரிசையாக எல்லா கட்சிகளிலும் ஒரு ரவுண்டு வந்து விட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், இப்போது விவசாயத்துடன் கூடிய பால் பண்ணைத் தொழிலை கவனித்து வருகிறார்.
தருமபுரி மாவட்ட திமுகவின் முகமாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் முல்லைவேந்தன். கடந்ட 1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர். 1989, 1996, 2006 என முன்று முறை திமுக எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக அடைந்த தோல்வி குறித்து கட்சி மேலிடத்தால் விளக்கம் கேட்கப்பட்டது.

அப்போது முல்லைவேந்தன் முறையாக அதற்கு விளக்கம் அளிக்கவில்லை என்பதால் அவரை திமுகவிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார் ஸ்டாலின். அதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு தேமுதிகவில் இணைந்த முல்லைவேந்தனுக்கு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை வழங்கினார் விஜயகாந்த். மூன்று ஆண்டுகள் மட்டும் அந்தக் கட்சியில் இருந்தவர், கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொண்டார்.
மூன்று வருடங்கள் கூட முழுமையாக கழியாத நிலையில் ஸ்டாலினிடம் கோபித்துக்கொண்டு அதிமுகவில் ஐக்கியமானார். ஆனாலும் முன்பு போல் ஆக்டிவ் பாலிடிக்ஸில் ஈடுபடுவதை குறைத்துக்கொண்டு, விவசாயம், பால் பண்ணை என கவனம் செலுத்தி வருகிறார். அரசியலில் கிடைக்காத நிம்மதி விவசாயத்திலும், பால் மாடுகள் வளர்ப்பிலும் கிடைப்பதாக கருதுகிறார்.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லுர் அருகே உள்ள இவரது தோட்டத்தில் பல ரகங்களை சேர்ந்த மாடுகள் உள்ளன. அவற்றை பராமரிக்க ஆட்கள் நியமித்திருந்தாலும் அவரே நேரடியாகவும் பார்த்துக்கொள்கிறார். அதேபோல் நவீன இயந்திரங்களை கொண்டு பால் பண்ணையை ஹைடெக்காக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications