1 வயது குழந்தையின் உயிர் காக்க உதவுங்களேன்
தர்மபுரி: இதயத்தில் பிரச்சனையுடன் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு வயது குழந்தையை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
தர்மபுரி மாவட்டம் கோலகம்பட்டியைச் சேர்நத்வர் மாரிமுத்து. தினசரி கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி ராஜேஸ்வரி.

இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. தனுஸ்ரீக்கு 6 மாதம் இருக்கும் போது எளிதில் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதை அவருடைய தாயார் ராஜேஸ்வரி கண்டுபிடித்தார்,
குழந்தைக்கு சாப்பிடுவதை விழுங்குவதில் சிக்கல் இருப்பதையும், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதையும் கண்டு அவர் வேதனைப்பட்டார். அப்போது குழந்தை தனுஸ்ரீக்கு இதயப் பிரச்சினை இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை.

குழந்தைக்கு ஒரு சமயம் மூச்சுத் திணறல் அறிகுறிகள் இருந்ததால் , உடனடியாக தனுஸ்ரீயை தூக்கிக்கொண்டு தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தையின் நிலைமை சரியாகவில்லை. அதன்பிறகு மாரிமுத்து-ராஜேஸ்வரி தம்பதி பல தனியார் மருத்துவர்களைச் சந்தித்தார்கள். இறுதியாக பெங்களூருக்குச் சென்றார்கள். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இதயப் பிரச்சினை இருப்பதாகவும், அவளுக்கு 2 வயதாகும்போதுதான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனிடையே கொரோனா மற்றும் கொரோனாவை தடுக்க போடப்பட்ட லாக்டவுன் காரணமாக குழந்தை தனுஸ்ரீக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை சேகரிக்கவும் அவர்களால் முடியவில்லை.
அண்மையில் தர்மபுரிக்கு மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் முகாம் நடத்தினர். அவர்கள் முகாமில் குழந்தை தனுஸ்ரீயின் உடல் நிலையை பரிசோதித்தார்கள். தனுஸ்ரீக்கு பிறவியிலேயே இதயத்தில் கடுமையான குறைபாடு இருப்பதை உறுதி செய்தனர்.

குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய மருந்துகள் உள்பட ரூ.2,80,000 தேவை என்று கூறினர். ஆனால் கூலித்தொழிலாளியான மாரிமுத்துவால் இந்த பணத்தை சம்பாதிக்க வாய்ப்பே இல்லை என்கிற நிலையில் குழந்தைய காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறார். அவரிடம் சொத்துக்களும் இல்லை. அன்றாடம் வேலை செய்தால்தான் சாப்பாட்டுக்கே வழி என்ற நிலையில் இருக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் உறவுகளோ நிதி கொடுத்து உதவ தயாராக இல்லை,.
எனவே கடினமான காலங்களில் தங்களுக்கு உதவ வேண்டும் என மனிதநேயமுள்ள, உன்னதமான, இரக்கமுள்ள மக்களுக்கு மாரிமுத்து கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தை தனுஸ்ரீயை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவியை அந்த குழந்தையை காப்பாற்ற உதவும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications