2 பக்கமும் கூட்டணி பேரம் பேசுறாங்க.. கண்டிஷனை ஏத்துக்கிட்டா வாங்க.. இல்லாட்டி போங்க: கேபி ராமலிங்கம்
தருமபுரி: பாஜக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. இதை ஏற்று கூட்டணிக்கு வருவதாக இருந்தால் வாங்க.. இல்லாவிட்டால் போங்க என காட்டமாகப் பேசியுள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கேபி ராமலிங்கம்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. அதிமுக, பாஜகவில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிவை எட்டவில்லை. தேமுதிக மற்றும் பாமகவை தங்களுடன் கூட்டணியில் இணைக்க அதிமுகவும், பாஜகவும் தீவிரமாக முயன்று வருகின்றன.

பாஜக, அதிமுக உடன் கூட்டணி பேச்சுகள்: ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்ற தேமுதிகவின் நிபந்தனையால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும், அதிமுகவும் தீவிரம் காட்டி வருவதால், அக்கட்சி யார் பக்கம் செல்லும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேமுதிகவின் நிபந்தனையை எந்த கட்சி ஏற்கும் என்பது இதுவரை உறுதியாகவில்லை.
இன்னொருபுறம், பாமகவும் ராஜ்யசபா சீட் நிபந்தனையை அதிமுக, பாஜகவிடம் வைத்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, இந்த முறை, அதிமுக அல்லது பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முனைப்பில் உள்ளது.
ராஜ்யசபா சீட்: ராஜ்யசபா சீட் கேட்டு, பாமக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் முரண்டு பிடித்து வரும் நிலையில், ராஜ்யசபா சீட் கொடுக்க பாஜக, அதிமுக என இரு கட்சிகளுமே தயக்கம் காட்டி வருகின்றன. மேலும், பாஜக, தங்கள் கூட்டணி கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிடவும் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இன்னும் கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் இன்று தருமபுரியில் பாஜக மாநில துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "சென்னை முதல் கன்னியாகுமரி வரை 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் களம் காண விரும்புகிறோம். பிற கட்சிகளை அவர்களின் சின்னங்களில் நிற்க வைத்து அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக பாஜக உழைக்கவில்லை. தமிழ்நாட்டில் மக்களுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.
வந்தா வாங்க.. வரலன்னா போங்க: இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வரவேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு கூட்டணி அமைக்கும் கட்சியினரும் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இதை சில கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இதேபோல, பிரதமராக மோடியை ஏற்பவர்கள் பாஜகவுடன் கூட்டணிக்கு வரலாம்.
இங்கு உள்ள மாநிலக் கட்சிகள் தான் தேசியக் கட்சிகள் மீது ஏறி சவாரி செய்கின்றன. இனி மாநிலக் கட்சிகள் தலைமையில் கூட்டணி இல்லை. தேசியக் கட்சிகள் தலைமையில் தான் கூட்டணி அமையும். பாஜக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. இதை ஏற்று கூட்டணிக்கு வருவதாக இருந்தால் வாங்க.. இல்லாவிட்டால் போங்க.
பேரத்தை முடிச்சிட்டு வாங்க: அங்கு எவ்வளவு சீட்? இங்கு எவ்வளவு சீட் என ஒரு சில கட்சிகள் இரு பக்கமும் கூட்டணி பேரம் பேசி வருகின்றன. பாமக, விசிக என எந்தக் கட்சியாக இருந்தாலும் அங்கு பேரத்தை முடித்துவிட்டு வரட்டும், கூட்டணி பற்றி பேசுவோம்" எனக் காட்டமாகக் கூறியுள்ளார் கேபி ராமலிங்கம்.
இதற்கு முன்னதாக கேபி ராமலிங்கம், "மாநிலங்களவை சீட் கேட்பவர்கள் மக்களவை தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும். 39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே பாஜக தொண்டர்களின் எண்ணம்" எனப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications