Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறைக்குள் நைட்ரஜன் கேஸ்.. கதவை உடைக்க வேண்டாம்.. டோரில் கடிதம் எழுதி வைத்து தாயும் மகனும் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரியில் கடன் பிரச்சினை மற்றும் தொழில் நஷ்டத்தால் அவதியடைந்த தாயும் மகனும் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்லம்பள்ளி வட்டம், பழைய குவாட்ரஸ் கோவிந்தசாமி கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல் (72). இவரது மனைவி சாந்தி (56). இவர்களின் மகன் விஜய் ஆனந்த் (35).

பொறியியல் பட்டதாரியான விஜய் ஆனந்த் போட்டித் தேர்வுகள் மூலம் அரசு வேலையை பெற முயற்சித்து வந்தார். ஆனாலும் பணி கிடைக்கவில்லை. இதனால் நண்பர்களுடன் இணைந்து ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் நூல் மில் ஒன்றை குத்தகைக்கு எடுத்து இயக்கி வந்தார்.

Mother and son comits suicide in Dharmapuri

இதைத் தொடர்ந்து அந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விஜய் ஆனந்திற்கு கடன் ஏற்பட்டது. இதுகுறித்து தனது தாய் சாந்தியிடம் விஜய் ஆனந்த் கூறியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் வட்டியையும் அசலையும் கேட்க ஆரம்பித்ததால் விஜய் ஆனந்த் மனமுடைந்தார். இதையடுத்து தனது தாயிடம் அழுதுக் கொண்டே நடந்தவற்றை மீண்டும் கூறியுள்ளார்.

இதனால் இருவருமே மன உளைச்சலில் இருந்த நிலையில் நேற்று பகல் பழனிவேல் பாலக்கோடு அருகில் உள்ள தங்களது விவசாய நிலத்தை பார்த்து வருவதற்காக சென்றுள்ளார். மாலையில் அவர் வீடு திரும்பியுள்ளார், அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. தன்னிடம் இருந்த சாவி மூலம் வீட்டை திறந்து அவர் உள்ளே சென்ற போது வீட்டில் உள்ள அறை ஒன்று உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

அந்த அறைக் கதவின் முகப்பில் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அதில் அறைககுள் நைட்ரஜன் கேஸ் உள்ளது. எனவே கதவை உடைத்து உள்ளே வரும் முன் காவல் துறைக்கு தகவல் தெரியப்படுத்தி பாதுகாப்புடன் நுழையவும் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிவேல் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பார்த்த போது சாந்தியும் விஜய் ஆனந்தும் சடலமாக இருந்தனர். இதையடுத்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்த போது இருவரும் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் தொழில் நஷ்டம் மற்றும் கடன் பிரச்சினையால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தனர். தற்கொலை செய்வது தொடர்பாக ஆன்லைன் மூலம் தகவல் திரட்டி 2 நைட்ரஜன் கேஸ் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

நைட்ரஜன் வாயுவை சுவாசித்துவிட்டு முகத்தில் பிளாஸ்டிக் கவர் போட்டு இறுக்க மூடிக் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து தாய், மகனின் சடலங்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+