நாட்டுக்கோழி வாங்க போனால், திருப்புவனத்தில் ஒரே ஆச்சரியம்.. 10 கிலோ ஆடு தந்த "இடி".. திணறும் தர்மபுரி
தர்மபுரி: தமிழகமெங்கும் இறைச்சி மார்க்கெட்களில், கால்நடை விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு, மாடு, கோழி, கடல் உணவுகளின் விலை கடுமையாக சரிவடைவது வழக்கம்.. காரணம் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை உண்ண மாட்டார்கள்..

அந்தவகையில், இந்த வருடமும் புரட்டாசி மாதம் தொடங்கியிருக்கிறது.. இதனால், ஆடு, மாடு, கோழி, முட்டை, மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. இறைச்சியை குறைவான அளவிலேயே வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டது.
திருப்புவனம் சந்தை: குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டுவது வழக்கம்.. இந்த திருப்புவனம் மார்க்கெட்டில்தான், வாரம்தோறும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை கால்நடை சந்தையும், பிறகு காய்கறி சந்தையும் நடைபெறுவது வழக்கம்.
கால்நடை சந்தையில் ஆடு, கோழி, தவிர, சேவல், வாத்து போன்றவைகளும் விற்பனை செய்யப்படும்.. இதற்கு காரணம், திருப்புவனத்தைச் சுற்றிலும் பெத்தானேந்தல், மணல்மேடு, கீழடி, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் ஆடு, கோழிகளை விவசாயிகள் வளர்த்து, இங்குவந்துதான் விற்பனை செய்கிறார்கள்.. எப்போதுமே 300 முதல் 1000 ஆடு, கோழிகள் வரை விற்பனையாகும்.. ஆனால், புரட்டாசி புரட்டாசி தொடங்கிவிட்டதால், ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்தும் சரியாக விலைக்கு போகவில்லையாம்.
ஆட்டுக்கறி: 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10,000 க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இப்போது, வெறும் ரூ.8000க்கு மட்டுமே விலை போவதாக கவலையுடன் கூறுகிறார்கள்.
நாட்டுக்கோழி விலையும், கிலோவுக்கு ரூ.350 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.. இப்போது, ரூ.450ஆக உயர்ந்துவிட்டதாம். 25 கிலோ எடை கொண்ட கிடா 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. புரட்டாசி மாதம் முடியும் வரைக்கும், இறைச்சி விலை குறைவாகவே விற்கப்படும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வருத்தம்: இதுபோலவே, தர்மபுரி மாவட்டத்திலும் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.. இங்குள்ள நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.. இதற்காகவே வியாபாரிகள், கால்நடைகளை கொண்டுவந்து இங்கு விற்றுவிட்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்..
இதற்காகவே, ஆட்டுச்சந்தை பிரத்யேகமாக நடைபெற்றும் வருகின்றது.. தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்காக இன்று வந்திருந்தனர்.
விற்பனை: ஆனால், காலை 6 மணிக்கு கூடிய ஆட்டுச்சந்தையில் சிறிய அளவில ஆடுகள் 2, 500 ரூபாயில் துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் 16,000 ரூபாயில் வரை மட்டுமே விற்பனையானதாம்.. இந்த புரட்டாசி முடியும்வரை இப்படித்தான் மந்த நிலையில் விற்பனையாகும் என்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications