உயிர் குடிக்கும் ‘தொப்பூர் கணவாய்’ சாலை.. இனி தலைகீழா மாறப்போகுது.. டெண்டர் கோரியது மத்திய அரசு!
தருமபுரி: தமிழ்நாட்டில் விபத்துகளுக்கு பெயர் போன இடம் என்றால் அது தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதி தான். இங்கு தொடர்ச்சியாக அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கின்றன. இந்த சாலையை மாற்றக் கோரி, தருமபுரி எம்.பி செந்தில் குமார் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில், மத்திய அரசு இதற்கு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்வதற்கு சேலம் - தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை (NH 44) பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. குறிப்பாக, லாரிகள், கண்டெய்னர்கள் என பல ஆயிரம் கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

கனரக வாகனங்கள் அதிகளவில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் மலைப்பாதை பகுதி சுமார் 6 கி.மீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ளது. இந்த சாலையில் கட்டமேடு முதல் போலீஸ் சோதனைச் சாவடி வரை உள்ள 3 கி.மீ சாலை மிகவும் சரிவாகவும், வளைவாகவும் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மலைப்பாதையில் கனரக வாகனங்களை ஓட்டுவது டிரைவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக உள்ளது இந்த கணவாய் சாலை பகுதி. இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் விபத்துகள் நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு விபத்துகள் நடப்பது தொடர் கதையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு 12 வாகனங்கள் அடுத்தடுத்து சங்கிலித் தொடர் போல மோதி விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்தனர். இப்பகுதியில் விபத்துகளை தடுக்க வாகனங்களை மலைப்பாதை சாலையில் 30 கி.மீட்டர் வேகத்தில் 2-வது கியரில் இயக்க வேண்டும் என்று விதிமுறை விதிக்கப்பட்டு, இந்த விதியை மீறும் வாகனங்களுக்கு மின்னணு முறையில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
Good news for people of #Dharmapuri
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 16, 2023
Due to my consistent follow up with Union Minister for Road Transport & #NHAI officials to ensure road safety in Thoppur Ghats which has the highest number of accidents
Tenders for alignment of #ThoppurGhat Section for 775 Crores has been bid pic.twitter.com/Nj5ufaktia
மேலும், சாலையில் கீறல்களை ஏற்படுத்தி, வாகனங்களின் வேகத்தை மட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டது. தொப்பூர் கணவாய் பகுதியில் காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துகளை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், இப்பகுதிகளில் வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருவது இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
தொப்பூர் கணவாய் பகுதியில் சாலையை சீரமைத்தால் மட்டுமே விபத்துகளைத் தவிர்க்க முடியும் என மத்திய அரசிடம் தெரிவித்து, தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார் தருமபுரி திமுக எம்.பி செந்தில் குமார். மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைசர் நிதின் கட்காரி மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை வைத்து வந்தார்.

இந்நிலையில், தொக்ப்பூர் கணவாய் பகுதியில் 6.6 கி.மீ சாலையை சீரமைக்க மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்நிலையில், "எனது தொடர் முயற்சியின் விளைவாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு சீரமைக்க ஒரு புதிய Elevated road அமைக்க அனுமதி அளித்து அதற்கான ஏலம் அறிவிப்பினை ரு.775 கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் செந்தில் குமார். அதில், "தருமபுரி மக்களுக்கு ஓர் நற்செய்தி. தொப்பூர் கணவாய் பகுதிதான் இந்தியாவிலேயே மிக அதிகமாக நடைபெறும் பகுதியாக உள்ளது. நான் எம்.பி ஆன பிறகு தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி, சுரங்கப்பாதை அமைக்கலாமா, வேறு சாலை அமைக்கலாமா என்றெல்லாம் ஆய்வு செய்து, இப்போது ரூ.775 கோடி மதிப்பில் டெண்டர் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதன் மூலம் ஒரு Elevated highway வரும். இதன் காரணமாக விபத்துகள் பெருமளவில் குறைக்கப்படும். போக்குவரத்து நேரமும் குறையும். தினசரி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்த நிலை இனி மாறும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications