ராமதாஸ் ''முத்து விழா'' ஏற்பாடுகள் தீவிரம்..! தருமபுரியில் தடபுடல் ஏற்பாடுகள்..!
தருமபுரியில் டாக்டர் ராமதாஸின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது
Recommended Video
தருமபுரி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் விழா தருமபுரியில் சிறப்பாக கொண்டாடப்ப உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸின் 80-வது பிறந்தநாள் கடந்த ஜுலை மாதம் கொண்டாடப்பட்டது.
அப்போது ஸ்டாலின், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ராமதாஸூக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் அப்போது பிறந்தநாளை தனது பேரன், பேத்திகள் என குடும்பத்தினரோடு எளிமையாக கொண்டாடிய ராமதாஸ் விழாவெல்லாம் வேண்டாம் என அவரது கட்சியினருக்கு அன்புக்கட்டளை போட்டிருந்தார்.

பொறுப்பு
மேலும், ராமதாஸ் பிறந்தநாளன்று அன்புமணி டெல்லியில் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய கையோடு டெல்லிக்கு சென்று அடுத்தநாள் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார் அன்புமணி.

முத்துவிழா
அதிமுகவிலிருந்து மீண்டும் தாய்க்கட்சியான பாமகவில் கடந்த மாதம் இணைந்த பேராசிரியர் தீரன், முத்துவிழாவை நடத்தியே ஆக வேண்டும் என ஒற்றைக்காலில் நின்று ராமதாஸிடம் அவர் ஒப்புதல் பெற்றுவிட்டார். தருமபுரியில் தனது தலைமையில் ராமதாஸ் முத்துவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் தீரன் தடபுடலாக செய்து வருகிறார்.

வாய்ப்பு
முத்து விழா பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ள பாமக, தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களை குவித்து தனது பலத்தை காட்ட தயாராகி வருகிறது. மேலும், நடக்க இருப்பது முத்துவிழா என்பதால் டெல்லியில் இருந்து மிக முக்கியமான ஒருவர் கூட அதில் கலந்து கொண்டு ராமதாஸை வாழ்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணியும் ஒருபுறம் நடைபெறுகிறதாம்.

அழைப்பு
தமிழக அரசியல் கட்சித்தலைவர்களை பாகுபாடின்றி முத்துவிழா கூட்டத்துக்கு அழைக்கலாம் என முக்கிய நிர்வாகி ஒருவர் யோசனை கூறியதாக கூறப்படுகிறது. இதனை உள்வாங்கிக் கொண்ட அன்புமணி ராமதாஸ் அது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications