அந்த நடிகையை குண்டுக்கட்டா தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி கெடுத்தேனா? சீமான் ஆணவ பேச்சு

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: என்னமோ வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வெச்சி கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுகிறீர்களே என நடிகை பலாத்கார புகார் குறித்து தருமபுரியில் மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆணவத்துடன் பேசியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து தருமபுரியில் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: என்ன பாலியல் வழக்கு? அந்த பொண்ணு யாரு, அவங்க சொல்லிட்டா அது உண்மையாகிடுமா, குற்றமாகிடுமா, ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள்.

Seeman Vijayalakshmi NTK

ஆனால் போலீஸார் விசாரிக்க வேண்டுமல்லவா, விசாரிக்காமலேயே உறுதி செய்துவிட்டால் என்ன அர்த்தம்? என்னமோ வயசுக்கு வந்ததும், குச்சியில் இருந்த புள்ளைய சோள காட்டுல வச்சி கற்பழிச்ச மாதிரி எல்லாரும் கதறிக் கிட்டு இருக்கீங்க.

பழி சுமத்துகிறார்கள்

நான் அரசியல்வாதியாக இருப்பதால் என் மீது பாலியல் பழி சுமத்துகிறார்கள். இதே நான் சாதாரண இயக்குநராக இருந்திருந்தால் என் மீது இப்படியெல்லாம் வழக்கு போட்டு பேசியிருப்பீர்களா? ஒரு முழு அதிகாரத்தையும் என் மீது திமுக அரசு காட்டுகிறது என்றால் என்னை பார்த்து நடுங்கிவிட்டது என்று அர்த்தம். நான் அரசியலில் எடுத்து வைக்கும் கருத்துகளுக்கு திமுகவால் என்னுடன் மோதி ஜெயிக்க முடியவில்லை. அவ்வப்போது ஒரு பெண்ணை கொண்டு வந்து புகார் கொடுக்க வைக்கிறார்கள். வேற என்ன காரணம் இருக்கிறது சொல்லுங்கள்.

வயது புள்ளயவா நான் கற்பழிச்சேன்?

என்னமோ கல்லூரியில் படிச்சிட்டு இருக்கிற புள்ளைய விருப்பமே இல்லாமல் கடத்திட்டு போய் கற்பழிச்சிவிட்ட மாதிரி, என்ன உங்கள் நாடகம். எவ்வளவோ மக்கள் பிரச்சினைகள் இருக்கும் போது எதுக்கு பெரியார பத்தி பேசுறீங்கன்னு என்னைய கேட்கிறீர்களே, நான் உங்களை கேட்கிறேன், ஏன் எவ்வளவோ மக்கள் பிரச்சினைகள் இருக்கும் போது எதுக்கு இந்த பிரச்சினையை திமுக பேசுகிறது.

நான் எவ்வளவு திமிரா இருக்கேன் பாருங்கள். என்னை சமாளிக்க முடியவில்லை. என்னை எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை. அதனால் என் மீது இப்படியெல்லாம் பழி போடுகிறார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகையின் பாலியல் விவகாரத்தை பொறுத்தவரையில் சீமான் இது போல் கேட்பது அவரது ஆணவத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணுக்கு போலியான வாக்குறுதிகளை கொடுத்து, அவரது சம்மதத்தின் பேரிலேயே உறவு கொண்டாலும் அது சட்டபடி குற்றமாகும். Rape is a rape!

சம்மதித்தாலும் பலாத்காரம்தான்

அது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உடலுறவு கொண்டுவிட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றதாததால் அந்த பெண் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுவதால் அது பலாத்காரமாகவே பார்க்கப்படுகிறது. இதுதான் சட்டம்!

நடிகை விவகாரத்தில் சீமான் கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவே குற்றம்சாட்டியுள்ளார். எனவே நடிகையின் விருப்பம் இல்லாமல் அவரை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்வதும் சட்டபடி குற்றமாகும்.

இப்படிப்பட்ட சூழலில் ஏராளமான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் சீமான், ஏதோ பெண்ணை தூக்கிட்டு போய் சோளகாட்டுல வச்சி கற்பழித்ததால்தான் அது பலாத்காரம் என பேசுவது சரியல்ல! அதிலும் சிரித்துக் கொண்டே நடிகையை "உனக்கு ஒன்றுமே தெரியாதா" என கேட்பது போல் பேசுவது ஆணவத்தின் உச்சம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+