தூள்! இதுதான் திமுக! 21 பேர் வேட்பாளர் பட்டியலில்.. ஏகப்பட்ட மருத்துவர்கள், முனைவர்கள், வழக்கறிஞர்கள்
தருமபுரி: மக்களவைத் தேர்தலுக்காக திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஏகப்பட்ட மருத்துவர்கள், பட்டதாரிகள், முனைவர்கள், வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,

1 ) வடசென்னை - கலாநிதி வீராசாமி
2 ) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்
5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
6) வேலூர் - கதிர் ஆனந்த்
7 ) தருமபுரி - அ.மணி
8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
9 ) சேலம் - செல்வ கணபதி
10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்
11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா
12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
13 ) கோவை - கணபதி ராஜ்குமார்
14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி
15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி
16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்
17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
18 ) பெரம்பலூர் - அருண் நேரு
19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்
20 ) ஈரோடு - பிரகாஷ்
21 ) ஆரணி - தரணி வேந்தன்
படித்தவர்கள் பலர்:
கலாநிதி வீராசாமி - முதுகலைப் பட்டதாரி - மருத்துவர். எம்.சி.எச். (பிளாஸ்டிக் சர்ஜரி) ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 2001 இல். மற்றும் எம்.எஸ். (பொது அறுவை சிகிச்சை) ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்.
தமிழச்சி தங்கபாண்டியன் - முனைவர் பட்டம் பிஎச்.டி மெட்ராஸ் பல்கலைக்கழகம்-2010
தயாநிதி மாறன் - பி.ஏ. (பொருளாதாரம்) லயோலா கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1989 இல்
தருமபுரி - அ.மணி - வழக்கறிஞர்
டி ஆர் பாலு - சென்னை, சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல்
ஆ ராசா - பட்டதாரி தொழில்முறை, இளங்கலை அறிவியல், பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1984, இளங்கலை சட்டப் பட்டம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் 1987
கதிர் ஆனந்த் - முதுகலைப் பட்டதாரி - 1997 இல் பால்ட்வின் மற்றும் வாலஸ் கல்லூரி USA இல் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம், 1995 இல் சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் இளங்கலை, மெட்ராஸ் பல்கலைக்கழகம்
கனிமொழி - எத்திராஜ் மகளிர் கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிஏ 1994, இது போக பலரும் வழக்கறிஞர்கள் என்று படித்தவர்கள் பலர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
50%க்கு மேல் புதியவர்கள் (11)
3 பெண்கள்
அடிமட்ட தொண்டர்கள்/ ஒன்றியச் செயலாளர்கள் - 2
முனைவர்கள் - 2
மருத்துவர்கள் - 2
பட்டதாரிகள் - 19
வழக்கறிஞர்கள் - 6
திமுக தேர்தல் பிளான்: 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.
திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)

போட்டியிடும் தொகுதிகள் விவரம்: திமுக - 21 ( வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்பத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளகுறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பூர், தஞ்சாவூர், தேனி , தூத்துக்குடி, தென்காசி, )
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி (தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறையில் காங்கிரஸ் போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது)
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2 (நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது)
சிபிஎம் - 2 ( மதுரை, திண்டுக்கல்)
மதிமுக -1 (திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது)
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)












Click it and Unblock the Notifications