தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா!

சைக்கிளில் சென்ற சிறுவனை போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சைக்கிளில் சென்ற சிறுவனை தடுத்து நிறுத்திய போலீஸ்-வீடியோ

    தர்மபுரி: ஊரெல்லாம் இந்த போலீஸ்காரின் கடமை உணர்ச்சியை பற்றிதான் பேசி கொண்டிருக்கிறார்கள்.. சைக்கிளில் போன சிறுவனை மடக்கி பிடித்து அலப்பறை தந்துள்ளார் இந்த போலீஸ்காரர்!

    தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர்தான் சுப்ரமணி. வழக்கம்போல வாகன சோதனையில் மற்ற போலீசாருடன் ஈடுபட்டு கொண்டிருந்தார் சுப்பிரமணி.

    யார், யார் ஹெல்மட் போடலையோ, அவர்களை வளைத்து வளைத்து பிடித்து கொண்டும், அவர்களின் ஆவணங்களை சோதனை செய்தும் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து ஒரு பள்ளி மாணவன் சைக்கிளில் போய் கொண்டிருந்தான். ஒரு கையில் செல்போனில் பேசி கொண்டே நகர்ந்து சென்றான். அவனை தடாலடியாக பாய்ந்து பிடித்தார் சுப்பிரமணி.

    பள்ளிக்குப் போகும் வழியில் குடிகாரர்கள் கூட்டம்.. காரணம் மதுக் கடை.. பெண்கள் கொந்தளிப்பு!பள்ளிக்குப் போகும் வழியில் குடிகாரர்கள் கூட்டம்.. காரணம் மதுக் கடை.. பெண்கள் கொந்தளிப்பு!

    சிறுவன்

    சிறுவன்

    அது ஒரு இலவச சைக்கிள்... அதனை அலேக்காக தூக்கி ஒரு ஓரமாக வைத்து, பூட்டும் போட்டுவிட்டார். இதையெல்லாம் பார்த்த சிறுவனுக்கு எதுவும் புரியவில்லை. ஏன் போலீஸ்கார் இப்படி செய்கிறார் என்று மலங்க மலங்க விழித்து நின்றான்.

    வீடியோ

    வீடியோ

    சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி சிறுவனை வழிமறித்து சைக்கிளை பூட்டி பறிமுதல் செய்து ஓரமாக நிற்க வைக்கும் இந்த வீடியோ வைரலாகிறது. அதில், சிறுவனிடம் சுப்பிரமணி கெடுபிடி செய்து கொண்டிருந்த சமயம், ஹெல்மட் போடாமலும், செல்போனில் பேசிக் கொண்டே பைக் ஓட்டிக் கொண்டும் சிலர் அந்த பக்கமாக சென்று கொண்டிருப்பதை காண முடிகிறது.

    பொதுமக்கள்

    பொதுமக்கள்

    அவரை விட்டுவிட்டு, சுப்பிரமணி சிறுவனிடம் கெடுபிடி செய்தது கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தக்கும் மேல்... அதுவரை சைக்கிளை அவனிடம் தரவே இல்லை.. காரணமும் சொல்லவில்லை! சிறுவன் தன் வீட்டுக்கு போனை போட்டு, குடும்பத்தினரை வரவழைத்து.. அதன்பின்னரே சைக்கிள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்த்த பொதுமக்கள், சைக்கிளில் செல்லும் நபர்களுக்கும் கோர்ட்டில் ஏதாவது புதுசா சட்டம் இயற்றப்பட்டு உள்ளதா? என்று கேள்வி எழுப்பி கொண்டே சென்றனர்.

    வீடியோ

    வீடியோ

    இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் சுப்பிரமணி 6 மாசத்துக்கு மேல வேலை பார்த்தது இல்லை, அதனால்தான் அவர் அடிக்கடி ரான்ஸ்பர் செய்யப்படுகிறார் என்றும் காவல்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. என்ன இருந்தாலும், வாகன சோதனையில் சைக்கிளை புடுங்கி வைத்து கொண்டது கொஞ்சம் ஓவர்தான் என்கிறார்கள் மக்கள்!

    English summary
    Police man troubles Cyclist for not wearing Helmet in Dharmpauri and this video goes viral now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X