திமுகவுக்கா?.. நானா?.. நெவர்!.. நான் சசிகலா, டிடிவியின் விசுவாசியாக்கும்!!- தங்கதமிழ்ச்செல்வன்
ஒகேனக்கல்: நான் சசிகலா, தினகரனின் விசுவாசி. எனவே அதிமுகவுக்கோ திமுகவுக்கோ நான் கட்சி தாவ மாட்டேன். என் பணி அமமுகவில் தொடரும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தினகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த செந்தில் பாலாஜி அண்மையில் அவரிடமிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதனால் தினகரன் கட்சியினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதுபோதா குறைக்கு தங்கதமிழ்ச்செல்வனும் திமுகவுக்கு தாவுகிறார் என்ற தகவல் அமமுக நிர்வாகிகளை மேலும் கவலைக்குள்ளாகியது.

கருத்து வேறுபாடும்
இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் வார இதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் விசுவாசமாக இருந்து கட்சி பணியாற்றுகிறேன். இதில் மாறுப்பட்ட கருத்துக்கு வேலையே இல்லை.

செல்ல மாட்டேன்
வேண்டுமென்றே அது போன்ற பொய்யான ஒரு தகவலை பரப்பி வருகின்றனர். சசிகலாவுக்கும் தினகரனுக்கும் விசுவாசமாக இருப்பேனே தவிர திமுகவுக்கோ அதிமுகவுக்கோ செல்ல மாட்டேன்.

கூடாரம்
என்னை பொருத்தவரை கட்சித் தாவல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் அதிமுகவில் உள்ள நிர்வாகிகள்தான் எங்கள் கூடாரத்துக்கு வரவுள்ளனர் என்றார்.

நடவடிக்கை
ஆனால் அமமுக நிர்வாகிகளோ இப்படிதானே செந்தில் பாலாஜியும் கூறினார். ஆனால் கடைசியில் என்ன ஆனது. எனவே தினகரன் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கலாய்த்து கொள்கின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications