விடாமல் காவு வாங்கிய தொப்பூர் கணவாய்! கார் டேஷ் போர்டில் பதிவான காட்சி! மீண்டும் நடந்த ஷாக் விபத்து

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: கடந்த 12 ஆண்டுகளில் 1010க்கும் அதிகமான விபத்துகளை சந்தித்த தொப்பூர் கணவாயில் இன்னொரு விபத்து ஒன்றும் சமீபத்தில் ஏற்பட்டு உள்ளது. இந்த வீடியோவின் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தருமபுரி மாவட்ட தொப்பூரில் வருடா வருடம் நூற்றுக்கணக்கில் விபத்துகள் ஏற்படுவது வழக்கம். இந்த கணவாய் கிட்டத்தட்ட ஒரு கொலைகார கணவாய் என்று கூட அழைக்கப்படும். கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் ஏற்பட்ட விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.

Video of another shocking accident from Thoppur Kanavai: Recorded in car dashboard

கொடூர விபத்து: இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். 11 கார்கள் சின்னாபின்னமானது. தொப்பூரில் நடந்த விபத்துகளில் இது மிக மோசமான ஒன்று. தொப்பூரில் இப்படி கொடூர விபத்துகள் நடப்பது இது புதிதல்ல.. கடந்த சில வருடங்களாக இங்கு விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

எங்கே உள்ளது?: தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். சாய்வான சாலையை கொண்ட இந்த பகுதி இரண்டு பக்கமும் மரங்கள், மலைகள் சூழ்ந்த அழகிய பகுதியாகும். ஆனால் ஆபத்தும் அதிகம்! அடுத்தடுத்த திருப்பங்கள், கடினமான வளைவுகள் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் தொம்பரகாம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் வரை உள்ள சாலைதான் அதிகம் விபத்து ஏற்படும் சாலை ஆகும்.

Video of another shocking accident from Thoppur Kanavai: Recorded in car dashboard

தொப்பூர் கணவாயில் 2018ல் மட்டும் 92 விபத்துகள் ஏற்பட்டன. 2019ல் 108 விபத்துகள் ஏற்பட்டன.. அதேபோல் 2020ல் 99 விபத்துகள் ஏற்பட்டன, இதில் 2018ல் 32 பேரும், 2019ல் 46 பேரும், 2020ல் 38 பேரும் பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துரையின் புள்ளி விவரங்களின்படி இங்கு 12 ஆண்டில் 1010 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விபத்துகள். கணக்கில் எடுக்கப்படாத சிறிய விபத்துகளும் உள்ளன.

கடந்த 12 ஆண்டுகளில் தொப்பூர் கணவாயில் ஏற்பட்ட விபத்துகளில் 255 பேர் பலியாகி உள்ளனர். சாய்வான சாலை, குறுகலான திருப்பங்கள் ஆகியவை இங்கு விபத்து ஏற்பட முக்கிய காரணம் ஆகும். அதேபோல் இங்கு டோல் கேட்டில் சமயங்களில் அதிக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். அப்போது பின்னாடி வரும் வாகனங்கள் இதை கவனிக்காமல் வேகமாக வந்து மோதும் வழக்கம் உள்ளது. 2020ல் ஏற்பட்ட மிக நீண்ட தொப்பூர் விபத்துக்கு இந்த போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரணம் ஆகும்.

மீண்டும் விபத்து: இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொப்பூர் கணவாயில் அதிக அளவில் ஸ்பீட் பிரேக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் வளைவுகளில் மெதுவாக செல்லும்படி ஸ்பீக்கர்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இங்கு 30 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல கூடாது என்று தொடர்ந்து இந்த ஸ்பீக்கரில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த வருடம் விபத்துகள் 23 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கே elevated சாலை எனப்படும் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது.

இதையடுத்து இங்கே தற்போது உயர்த்தப்பட்ட சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தொப்பூர் கணவாயில் இன்னொரு விபத்து ஒன்றும் சமீபத்தில் ஏற்பட்டு உள்ளது.தொப்பூர் - ஓமலூர் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

அதில் கார் ஒன்று செல்கிறது. அதில் டேஷ் போர்டில் உள்ள கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளன. டேஷ் போர்டில் இருக்கும் கேமராவில் எதிரே வரும் வாகனங்கள் தெரிந்து உள்ளன. அப்போது எதிர் பக்கம் வந்த டேங்கர் லாரி ஒன்று வந்து வேகமாக சாலையை கிராஸ் செய்து அப்படியே மோதி விழுந்துள்ளது.

வளைவில் வந்த வேகத்தில் இந்த கார் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. கார் மெல்லிசான இடைவெளியில் தப்பித்து உள்ளது. டேஷ் போர்டில் உள்ள கேமராவில் இந்த சம்பவம் அப்படியே காட்சியாக பதிவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+