நியூட்ரல் போட்டால் காலி.. தொப்பூர் கணவாயில் மீண்டும் கொடூர விபத்து.. அதிர வைத்த வீடியோ காட்சிகள்!
தருமபுரி: தொப்பூர் கணவாயில் நேற்று மீண்டும் பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டு உள்ளது. கண்டெயினர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த லாரி நியூட்ரல் போட்டு வந்ததாக கூறப்படுகிறது. பிரேக் பிரஷர் குறைந்த நிலையில், கடைசியில் பிரேக் பெயிலியர் ஆகி விபத்து ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாரும் பலியாகவில்லை. டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக நெட்டிசன் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ கவனம் பெற்று வருகிறது.
எங்கே உள்ளது?: தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். சாய்வான சாலையை கொண்ட இந்த பகுதி இரண்டு பக்கமும் மரங்கள், மலைகள் சூழ்ந்த அழகிய பகுதியாகும். ஆனால் ஆபத்தும் அதிகம்! அடுத்தடுத்த திருப்பங்கள், கடினமான வளைவுகள் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் தொம்பரகாம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் வரை உள்ள சாலைதான் அதிகம் விபத்து ஏற்படும் சாலை ஆகும்.
தொப்பூர் கணவாயில் 2018ல் மட்டும் 92 விபத்துகள் ஏற்பட்டன. 2019ல் 108 விபத்துகள் ஏற்பட்டன.. அதேபோல் 2020ல் 99 விபத்துகள் ஏற்பட்டன, இதில் 2018ல் 32 பேரும், 2019ல் 46 பேரும், 2020ல் 38 பேரும் பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறையின் புள்ளி விவரங்களின்படி இங்கு 11 ஆண்டில் 961 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விபத்துகள். கணக்கில் எடுக்கப்படாத சிறிய விபத்துகளும் உள்ளன.
கடந்த 12 ஆண்டுகளில் தொப்பூர் கணவாயில் ஏற்பட்ட விபத்துகளில் 255 பேர் பலியாகி உள்ளனர். சாய்வான சாலை, குறுகலான திருப்பங்கள் ஆகியவை இங்கு விபத்து ஏற்பட முக்கிய காரணம் ஆகும். அதேபோல் இங்கு டோல் கேட்டில் சமயங்களில் அதிக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். அப்போது பின்னாடி வரும் வாகனங்கள் இதை கவனிக்காமல் வேகமாக வந்து மோதும் வழக்கம் உள்ளது. 2020ல் ஏற்பட்ட மிக நீண்ட தொப்பூர் விபத்துக்கு இந்த போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரணம் ஆகும்.
உண்மையான காரணம்: பெங்களூரில் இருந்து தமிழ்நாடு உள்ளே வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக சாலையின் உயரம் குறையும். இந்த பகுதியில் சாலை எதிர்பார்க்காத அளவிற்கு சரிவாக இருக்கும். சாலையில் சாதாரணமாக செல்லும் போது அதை உணர முடியாது. ஆனால் புவியியல் அடிப்படையில் பார்த்தால் நாம் மலையில் இருந்து சரிவாக வாகனத்தை ஓட்டி இறக்குவதுபோல் இறக்க வேண்டும்.
இதில் கார்கள் எளிதாக இறங்கிவிடும். காரணம் அதன் பிரேக். ஆனால் லாரிகளில் இருப்பது ஏர் பிரேக். அவை பிரஷர் வைத்து இயங்குபவை. இங்கே லாரியை வேகமாக இயக்கினால் அது கட்டுப்பாட்டை இழந்து சரிவான ரோடு என்பதால் விபத்து ஏற்படும். அதுவே.. லாரியை பிரேக் பிடித்தபடியே மெதுவாக இயக்கினாலும் பிரேக் பிரஷர் குறைந்து குறைந்து பிரேக் பெயிலியர் ஆகிவிடும்.
லாரிகளில் உள்ளே ஏர் பிரேக் பெயிலியர் ஆவதே இங்கே நடந்த 90 சதவிகித விபத்துகளுக்கு காரணம் என்கிறார்கள் அங்கே உள்ள லாரி ஓட்டுனர்கள்.
பிரச்சனைக்கு தீர்வு: இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொப்பூர் கணவாயில் அதிக அளவில் ஸ்பீட் பிரேக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் வளைவுகளில் மெதுவாக செல்லும்படி ஸ்பீக்கர்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இங்கு 30 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல கூடாது என்று தொடர்ந்து இந்த ஸ்பீக்கரில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த வருடம் விபத்துகள் 23 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கே elevated சாலை எனப்படும் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இதையடுத்து இங்கே தற்போது உயர்த்தப்பட்ட சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தொப்பூர் கணவாயில் இன்னொரு விபத்து ஒன்றும் நேற்று ஏற்பட்டு உள்ளது.தொப்பூர் - ஓமலூர் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
அங்கே விபத்துகளை தவிர்க்க 6.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அங்கே உயர் மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 905 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் இந்த மாதமே தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 12 ஆண்டுகளில் 1010க்கும் அதிகமான விபத்துகளை தொப்பூர் கணவாய் சந்தித்து உள்ளது. இங்கே நடக்கும் விபத்துகளுக்கு காரணம் அமானுஷ்யம், பேய், பிசாசு என்றெல்லாம் சிலர் சொன்னாலும்.. உண்மையான காரணம் என்னவோ பிரஷர் குறைந்து பிரேக் பெயிலியர் ஆகும் சாதாரண இயற்பியல் பிரச்சனைதான்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications