அவங்கதான் காரணம்.. அவங்க இல்லைன்னா இந்த கூட்டணியே கிடையாது.. அன்பு பொழியும் அன்புமணி!
அதிமுக - பாமக கூட்டணி உருவாவதற்கு மொத்தம் இரண்டு நபர்கள்தான் காரணம் என்று பாமக வேட்பாளர் எம்.பி அன்புமணி தெரிவித்து இருக்கிறார்.
தருமபுரி: அதிமுக - பாமக கூட்டணி உருவாவதற்கு மொத்தம் இரண்டு நபர்கள்தான் காரணம் என்று பாமக வேட்பாளர் எம்.பி அன்புமணி தெரிவித்து இருக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்காக தருமபுரியில் நேற்று அன்புமணி பிரச்சாரம் செய்து வருகிறார். தினமும் இவர் பிரச்சாரத்தில் பேசும் விஷயங்கள் வைரலாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக இளைஞரணி செயலாளர் எம்.பி அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அன்புமணி பிரச்சாரம்
அன்புமணி தனது பிரச்சாரத்தில், திமுக ஆட்சியில் முதலாளிகள் மட்டுமே வளர்ந்தார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் தொழிலாளிகளும், மக்களும் வேகமாக வளர்ந்தனர். அதிமுக கூட்டணி அடிமட்ட மக்களுக்கான கூட்டணி. விவசாயிகளின் நலனுக்கான கூட்டணி. அவர்களுக்கு வாக்களிக்க வேண்டியது மக்களின் கடமை.

அன்புமணி கோபம்
ஸ்டாலின் அறிவித்திருக்கும் வேட்பாளர்கள் பலர் சாராய தொழில் அதிபர்கள். பெரிய பெரிய சொத்துக்கள் வைத்திருக்கும் நபர்கள். ஆனால் அதிமுக கூட்டணியில் எளிய மக்கள், விவசாயிகள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் மக்களின் கஷ்டம் புரியும்.
கலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்!

நல்ல கூட்டணி
மக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் இந்த கூட்டணியை உருவாக்கினோம். ஆளும் கட்சியுடன் இருந்தால்தான் மக்களுக்கு நலத்திட்டங்களை பாமக கொண்டு வர முடியும். அதனால் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். மத்திய ஆட்சி மூலம் நாம் நிறைய நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு வருவோம்.

யார் காரணம்
அதிமுக தலைமையிலான கூட்டணி அமைவதற்கு இரண்டு பேர்தான் காரணம் என்று கூட சொல்லலாம். அதிமுக அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் இல்லாவிட்டால் இந்தக் கூட்டணி உருவாகி இருக்குமா என்று கூட தெரியாது. இந்த கூட்டணி உருவாவதற்கு பின் ராமதாஸூக்குப் பெரும் பங்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது, என்றுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications