Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த இடமே அமானுஷ்யம்தான்! போகும்போதெல்லாம் வரும் சிலிர்ப்பு! தொப்பூர் கணவாயில் அப்படி என்ன இருக்கு?

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: கடந்த 12 ஆண்டுகளில் 1010க்கும் அதிகமான விபத்துகளை தொப்பூர் கணவாய் சந்தித்து உள்ளது.

1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் விழுந்த துளை காரணமாக மொத்தமாக கப்பலும் மூழ்கியது. 52,310 டன் எடை கொண்ட இந்த கப்பல் நியூயார்க் செல்லும் வழியில் கடலுக்குள் மூழ்கி மொத்தமாக அழிந்தது. இந்த விபத்தில் மொத்தம் 1,504 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். மனித வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான கப்பல் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். சர்வதேச அளவில் கடல் பயணத்தையே மாற்றியதுதான் டைட்டானிக் விபத்து.

Why is Thoppur Kanavai giving night mare to drivers in the national highway?

டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது.

இந்த கப்பல் மூழ்கி இருக்கும் அந்த பகுதியில் இப்போதும் பல அமானுஷ்யங்கள் நிலவுவதாக பலர் கூறுவது உண்டு. இங்கே பல முறை சென்று வந்த.. டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூட அந்த இடத்தில் ஒரு அமானுஷ்ய ஆற்றல் இருப்பதை உணர்ந்ததாக கூறியது உண்டு. சமீபத்தில் கூட இதை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து உள்ளது. அப்போது ஜேம்ஸ் கேமரூன் தந்த இந்த பேட்டி கூட வைரலானது.

தொப்பூர்: அந்த பகுதிக்கு இணையாக அமானுஷ்ய உணர்வை தரக்கூடிய, கடுமையான அழுத்தத்தை தரக்கூடிய இடம்தான் தொப்பூர் கணவாய். அந்த இடத்தை பைக், காரில் கிராஸ் செய்தாலே.. உடம்பில் ஒரு சிலிர்ப்பு, நடுக்கம் ஏற்படும். சுற்றிலும் சிறிய குன்றுகள், மரங்கள், குரங்குகள் என்று பார்க்கவே ரம்மியமாக காட்சி அளித்தாலும் கூட அந்த இடம் உடலை ஒரு நிமிடம் நடுங்க வைத்துவிடும்.

கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் ஏற்பட்ட விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.

இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். 11 கார்கள் சின்னாபின்னமானது. தொப்பூரில் நடந்த விபத்துகளில் இது மிக மோசமான ஒன்று. தொப்பூரில் இப்படி கொடூர விபத்துகள் நடப்பது இது புதிதல்ல.. கடந்த சில வருடங்களாக இங்கு விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

எங்கே உள்ளது?: தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். சாய்வான சாலையை கொண்ட இந்த பகுதி இரண்டு பக்கமும் மரங்கள், மலைகள் சூழ்ந்த அழகிய பகுதியாகும். ஆனால் ஆபத்தும் அதிகம்! அடுத்தடுத்த திருப்பங்கள், கடினமான வளைவுகள் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் தொம்பரகாம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் வரை உள்ள சாலைதான் அதிகம் விபத்து ஏற்படும் சாலை ஆகும்.

தொப்பூர் கணவாயில் 2018ல் மட்டும் 92 விபத்துகள் ஏற்பட்டன. 2019ல் 108 விபத்துகள் ஏற்பட்டன.. அதேபோல் 2020ல் 99 விபத்துகள் ஏற்பட்டன, இதில் 2018ல் 32 பேரும், 2019ல் 46 பேரும், 2020ல் 38 பேரும் பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறையின் புள்ளி விவரங்களின்படி இங்கு 11 ஆண்டில் 961 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விபத்துகள். கணக்கில் எடுக்கப்படாத சிறிய விபத்துகளும் உள்ளன.

கடந்த 12 ஆண்டுகளில் தொப்பூர் கணவாயில் ஏற்பட்ட விபத்துகளில் 255 பேர் பலியாகி உள்ளனர். சாய்வான சாலை, குறுகலான திருப்பங்கள் ஆகியவை இங்கு விபத்து ஏற்பட முக்கிய காரணம் ஆகும். அதேபோல் இங்கு டோல் கேட்டில் சமயங்களில் அதிக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். அப்போது பின்னாடி வரும் வாகனங்கள் இதை கவனிக்காமல் வேகமாக வந்து மோதும் வழக்கம் உள்ளது. 2020ல் ஏற்பட்ட மிக நீண்ட தொப்பூர் விபத்துக்கு இந்த போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரணம் ஆகும்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொப்பூர் கணவாயில் அதிக அளவில் ஸ்பீட் பிரேக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் வளைவுகளில் மெதுவாக செல்லும்படி ஸ்பீக்கர்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இங்கு 30 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல கூடாது என்று தொடர்ந்து இந்த ஸ்பீக்கரில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த வருடம் விபத்துகள் 23 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கே elevated சாலை எனப்படும் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது.

இதையடுத்து இங்கே தற்போது உயர்த்தப்பட்ட சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தொப்பூர் கணவாயில் இன்னொரு விபத்து ஒன்றும் நேற்று ஏற்பட்டு உள்ளது.தொப்பூர் - ஓமலூர் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

நேற்று விபத்து: நேற்று மாலை அங்கு மீண்டும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதையும் நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (வயது56) க/பெ. கார்வின் த.விமல் (வயது 28) த/பெ.ஜெயபால், . அனுஷ்கா (வயது 23) க/பெ. விமல், . ஜெனிபர் (வயது 29) க/பெ. வினோத் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர். இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தின்படி இரண்டு லேன்களில்.. ஒரு லேனில் ஒரு லாரி, அதன்பின் ஒரு கார் சென்று உள்ளது. இன்னொரு லேனில் ஒரு கார், அதன்பின் இரண்டு லாரி வந்துள்ளது. இதில் இரண்டாவதாக வந்த லாரிதான் விபத்திற்கு காரணம்.

அதிக சுமை ஏற்றி வந்த அந்த லாரி பிரேக் பிடிக்க முடியாமல் வேகமாக கட்டுப்பாட்டை இழந்து தனக்கு முன்னால் சென்ற லாரியில் மோதியது. அந்த லாரி அதற்கு இடதுபக்கம் சென்ற லாரியில் மோதி, அதோடு முன்னால் சென்ற காரிலும் மோதியது.

இதில் மொத்தமாக அந்த லாரி மற்றும் கார் தண்ணீருக்குள் விழுந்தது. பாலத்தை உடைத்து கொண்டு தண்ணீரில் விழுந்துள்ளது. இப்படித்தான் மொத்த விபத்தும் ஏற்பட்டு உள்ளது. அந்த லாரி அதிக சுமை ஏற்றி வந்து பிரேக் பெயிலியர் ஆனதே விபத்திற்கு காரணம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+