தருமபுரியில் எல்லாம் சரியாதானே போச்சு! திடீர்னு நடந்த ட்விஸ்ட்! சவுமியா அன்புமணி தோற்றது ஏன்?
தருமபுரி: தருமபுரி லோக்சபா தேர்தலில் சவுமியா அன்புமணி நூலிழையில் தோல்வியை சந்தித்தது எதனால் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. அதில் தமிழகத்தில் உள்ள விஐபி தொகுதிகளில் முக்கியமானது தருமபுரி தொகுதியாகும்.

இங்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு தருமபுரி தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, 2019ஆம் ஆண்டு திமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம் தோல்வியடைந்துள்ளார்.
இந்த முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து தனது மனைவியை தருமபுரி தொகுதியில் களமிறக்கியுள்ளார். சவுமியா அன்புமணிக்காக அவருடைய மகள்கள் சம்யுக்தா, சம்சுத்ரா, சங்கமித்ரா ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். சங்கமித்ரா தனது கணவர், குழந்தையுடன் தருமபுரியில் தங்கியிருந்து பிரச்சாரம் செய்தார்.
தருமபுரி தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து பேசிய போது ராமதாஸின் ஆதரவாளர்களால் அவருக்கு சிறப்பு வரவேற்பு கிடைத்தது. தனது தாய் வென்றால் என்னென்ன திட்டங்கள் கிடைக்கும் என்பது குறித்தும் சங்கமித்ரா தெரிவித்திருந்தார். பாஜகவின் கூட்டணியில் களமிறங்கியுள்ள சவுமியா அன்புமணி வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
பசுமைத் தாயகம் என்ற ஒரு அமைப்பை வைத்து நடத்தி வருகிறார் சவுமியா. தருமபுரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), மேட்டூர்.
2021 சட்டசபை தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் 3-ல் அதிமுக; 2-ல் பாமக வென்றது. தருமபுரி லோக்சபா தொகுதி எம்பியாக இருந்தவர்களில் 5 எம்பிக்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இத்தொகுதியில் பாமக 4 முறை வென்றுள்ளது. திமுக 3 முறை, அதிமுக, காங்கிரஸ் 2 முறை வென்றுள்ள்ன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ஒரு முறை இத்தொகுதியில் வென்றிருக்கிறது.
தருமபுரி தொகுதியில் வன்னியர்கள் 35%; தலித்துகள் 25% ; கொங்கு கவுண்டர்கள் 15%; இதர சமூகத்தினர் 25% உள்ளனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் கணிசமான வாக்காளர்களாக உள்ளனர். இந்த முறை திமுக சார்பில் ஆ.மணியும் பாமக சார்பில் சவுமியா அன்புமணியும், அதிமுக சார்பில் டாக்டர் அசோகனும் நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவனும் போட்டியிட்டனர்.
இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதையடுத்து சில சுற்றுகளில் சவுமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதனால் அவர் நிச்சயம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த தொகுதியில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் சொல்லப்பட்டது. அதாவது தருமபுரியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு பாமக முன்னேறி வந்தது தெரியவந்தது.
தருமபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கும் பாமகவுக்கும் பலத்த போட்டி நிலவும் என கள நிலவரத்தில் குறிப்பிடப்பட்டது. பாலக்கோட்டில் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் செல்வாக்கு உள்ளது. அரூரிலும் பாமகவுக்கு செல்வாக்கு உள்ள நிலையில் இவைதான் சவுமியா முன்னிலை வகிக்க காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டது.
மொத்தமுள்ள சுற்றுகளில் கடைசி சுற்றுக்கு முன்பு வரை சவுமியா முன்னிலை வகித்து வந்ததால் அவர் வெல்வார் என பாமகவினர் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணிய போது திமுக வேட்பாளர் ஆர்.மணி, சவுமியாவை விட 21,300 வாக்குகளை அதிகம் பெற்று வென்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications