தகாத உறவு விபரீதம்.. கணவனை தோசைக் கல்லால் கொலை செய்த மனைவி.. 2 ஆண்டு தலைமறைவுக்கு பின் சிக்கிய ஜோடி!
தருமபுரி: தகாத உறவைக் கண்டித்ததால் கணவனை தோசை கல்லால் படுகொலை செய்துவிட்டு தலைமறைவான மனைவியும் அவரது ஆண் கூட்டாளியும் சிக்கி இருக்கின்றனர்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி-வீரபாண்டி இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தை ரயில்வே போலீசார் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

தற்கொலை, விபத்து அல்ல
ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்தவர் தற்கொலை செய்து கொள்ளவும் இல்லை- ரயில் மோதி பலியாகவும் இல்லை என போலீசார் கண்டுபிடித்தனர். அத்துடன் அந்த நபர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.

ஒப்புதல் வாக்குமூலம்
இந்நிலையில் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீசார் குற்ற வழக்கு ஒன்றில், தருமபுரி மாவட்டம் லிங்கநாயக்கனஅள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கைது செய்தனர். இந்த விசாரணையில் தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த லிங்கநாயக்கனஅள்ளியை சேர்ந்த மாது மகன் தர்மதுரை என்பவரை கொலை செய்து காரில் எடுத்து வந்து வீரபாண்டி அருகே ரயில் தண்டவாளத்தில் வீசியது தெரியவந்தது.

தகாத உறவால் விபரீத படுகொலை
மேலும் போலீசார் இது குறித்து விசாரணை செய்ததில், கொலை செய்யப்பட்ட தர்மதுரையின் மனைவி பிரபாவதிக்கும் கோவிந்தராஜ்க்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் தர்மதுரை மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாவதி, ஆசை நாயகன் கோவிந்தராஜிடன் சேர்ந்து கடந்த 4.10.2020 அன்று கணவன் தர்மதுரையை தோசை கல்லால் அடித்து கொன்றுள்ளனர். பின்னர் கோவிந்தராஜூம் பிரபாவதியும் சேர்ந்து தர்மதுரை சடலத்தை காரில் ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசிசென்றுள்ளானர்.

நடித்து காட்டிய ஜோடி
இருவரும் கூட்டாக, தர்மதுரை ரயிலில் அடிப்பட்டு இறந்தது போல் நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் இந்த வழக்கை தர்மபுரி மாவட்டம், கடத்தூர் போலீசிடம் ஒப்படைத்தனர். பின்னர் கடத்தூர் போலீசார் பிரபாவதி மற்றும் ஆசை நாயகன் கோவிந்தராஜ் இருவரையும் கைது செய்து அவர்கள் கொலை எப்படி செய்தார்கள் என கடந்த 4 நாட்களாக சம்பவம் நடந்த இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணையை முடித்துக்கொண்டு இருவரையும் சிறையில் அடைத்தனர்.
-
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications