ஆஹா.. தருமபுரி தொகுதியில் மாம்பழம் தடுமாறுதா? சவுமியா அன்புமணி நிலை என்ன? தந்தி டிவி போல் ரிசல்ட்!
தருமபுரி: தருமபுரி லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடும் நிலையில், அங்கு வெற்றி வாய்ப்பு யாருக்கு? தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன தெரியுமா?
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பணியில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் அ.மணி, அதிமுக வேட்பாளராக அசோகன், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார், பாமகவின் அன்புமணி ராமதாஸை தோற்கடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது, பாஜக கூட்டணியில் சௌமியா அன்புமணி போட்டியிடுவதால் தருமபுரி தேர்தல் களம், அனைவரும் எதிர்பார்க்கும் தொகுதியாக மாறியுள்ளது. இந்நிலையில், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், தருமபுரி தொகுதியில் வெல்லப்போவது யார் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தருமபுரி லோக்சபா தொகுதியில் திமுக 33 - 39 % வாக்குகளைப் பெறும் என்றும், பாமக 29 - 35 % வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக 23 - 29% வாக்குகளைப் பெறும் என்றும், நாம் தமிழர் கட்சி 5 - 8% வாக்குகளைப் பெறும் என்றும் தந்தி டிவி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவின் சவுமியா அன்புமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்புள்ள தொகுதி என தருமபுரி சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. ஆனால், தந்தி டிவி கருத்துக்கணிப்போ, தருமபுரியில் மீண்டும் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு என்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications